நாட்டின் பெருந்தோட்டத் தொழிற்துறையின் மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சீ.ஆர்.டீ தேயிலை, இறப்பர், தென்னை சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பம்பித்து வைக்கப்பட்டது.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் உரிய துறைசார்ந்த சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உற்பத்தியாளர்களினதும், சந்தைப்படுத்துநர்களினதும் தேவைகளை இனங்கண்டுகொள்வதற்கும், புதிய தொழில்நுட்ப வசதிகளை அறிந்துகொள்வதற்கும் அதனூடாக தேசிய உற்பத்திகளின் தரத்தினை மேம்படுத்தவும் சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்கள், சந்தைப்படுத்துநர்கள், கொள்வனவாளர்கள் மற்றும் பெருந்தொகையான முதலீட்டாளர்கள் இக்கண்காட்சியில் இணைந்துகொண்டிருந்தனர். இவ்வருடம் இக்கண்காட்சி இலங்கையில் நடைபெறுவதனூடாக இலங்கையின் பெருந்தோட்டக் கைத்தொழிற்துறை உற்பத்திகளை பல புதிய பரிணாமங்களின் ஊடாக வெளிநாட்டு சந்தைக்கு வழங்குவதற்கான வாய்ப்பும் கிடைக்கப்பெற்றுள்ளது.

கண்காட்சியை திறந்துவைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனைப் பார்வையிட்டதுடன், வர்த்தகர்களுடனும் உரையாடிருந்தார். அமைச்சர் நவீன் திஸாநாயக்க, பிரதி அமைச்சர் லக்‌ஷ்மன் வசந்த பெரேரா உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.