லொறியை திருடிச் சென்ற நபரால் நேர்ந்த விபத்துக்கள் ; ஒருவர் பலி ; நால்வர் காயம்

Published By: Digital Desk 1

16 Nov, 2025 | 11:27 AM
image

கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 15 ஆம் திகதி லொறியை திருடிச் சென்ற நபரால் இரண்டு விபத்து சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,   நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸால் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

கடந்த 15 ஆம் திகதி கந்தானை , மரியா மாவத்தையில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் லொறி ஒன்று  திருடப்பட்டது. இதனை அடுத்து லொறியின் உரிமையாளரும் மற்றும் அவரது ஊழியர்களும் சேர்ந்து வாகனத்தை பின்தொடர்ந்தனர். சந்தேக நபர் லொறியை நிறுத்தாமல் படகம் நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார்.

இதன்போது, சந்தேகநபர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர். அதனை தொடர்ந்து மற்றுமொரு மோட்டார் சைக்கிளை மோதியதில் இருவர் காயமடைந்தனர்.

அதன் பின்னர் லொறி சுவர் மீது மோதி கழிந்தது.

இரண்டாவது விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற கம்பஹாவைச் சேர்ந்த 43 வயதுடைய நபர், ராகம வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். காயமடைந்த மற்றைய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொது மக்கள் சந்தேக நபரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

ஜா-எலவைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபர், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59
news-image

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும்...

2026-08-10 01:51:38
news-image

ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப்...

2026-08-09 14:33:03
news-image

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும்...

2026-08-09 15:52:35
news-image

சமூக ஊடகங்கள் மூலம் சிறைச்சாலை அநீதியை...

2026-08-09 14:34:30
news-image

சிறைச்சாலைகளில் கைதிகள் மிருகங்களை விடவும் மோசமாக...

2026-08-09 14:57:24
news-image

சிறை மோதலுக்கு எதிர்க்கட்சிகளை குறை கூறுவது...

2026-08-09 15:25:39
news-image

ஜே.ஆரின் அரசியலமைப்புக்கு அரசாங்கம் மேலும் வலு...

2026-08-09 14:48:04