நகைச்சுவை படைப்பாக தயாராகும் சித்தார்த்தின் 'ரௌடி & கோ'

15 Nov, 2025 | 06:17 PM
image

திறமை வாய்ந்த பிரபல நடிகரான சித்தார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ரௌடி & கோ' எனும் திரைப்படம் முழு நீள நகைச்சுவை படைப்பாக தயாராகி வருகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரௌடி & கோ ' எனும் திரைப்படத்தில் சித்தார்த் , ராசி கண்ணா, வம்சி, யோகி பாபு ,சுனில், ரெடின் கிங்ஸ்லி, பிராங்க் ஸ்டார் ராகுல், வெற்றி மணி, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரேவா இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை ஃபேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' மக்களின் பிரச்சனைகளை எளிதாக கையாளும் கொர்ப்பரேட் நிறுவனமாக இயங்கும் ரௌடிகளின் உலகத்திற்கு ரசிகர்களை இப்படம் அழைத்து செல்கிறது.

சிக்கலான சம்பவத்தாலும் அதனால் ஏற்படும் விளைவாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை படமாக இப்படத்தின் திரைக்கதை உருவாகி இருக்கிறது. ரௌடிகளின் கொர்ப்பரேட் சாம்ராஜ்யத்தை நகைச்சுவையுடன் விவரிப்பதால் இப்படத்திற்கு 'ரௌடி & கோ' என பெயரிடப்பட்டிருக்கிறது'' என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என்றும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும்  டீசர் விரைவில் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ஜெய் நடிக்கும் #AGS29 திரில்லர்...

2026-09-07 17:01:08
news-image

நடிகை அபிநயா நடித்திருக்கும் 'ஹோப்- HOPE' ...

2026-09-07 17:00:52
news-image

ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'மொத...

2026-09-07 16:47:56
news-image

நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் 'டாடா -...

2026-09-07 16:46:49
news-image

கடவுள் தந்த பரிசு' படத்தில் மூலம்...

2026-09-07 16:26:51
news-image

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய...

2026-09-07 16:24:36
news-image

தனுஷின் 'ஓம் 'திரைப்படத்தில் நடிக்கும் மம்முட்டியின்...

2026-09-07 16:24:25
news-image

இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்த மாரி...

2026-09-07 16:24:03
news-image

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் நடிக்கும் 'ஜெடூசி'...

2026-09-07 16:04:00
news-image

ஐ அம் கேம் - திரைப்பட...

2026-09-06 14:07:06
news-image

பட மாளிகையில் வெளியாகும் 'வைல்டு தமிழ்நாடு'...

2026-09-05 16:44:13
news-image

விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2'...

2026-09-05 16:35:20