எம்முடைய குடும்பத் தலைவரின் வருமானம் மாத செலவுகளுக்கும், நாளாந்த செலவுகளுக்கும் போதுமானதாக இருந்தாலும்... குடும்ப தலைவி அன்பான அனுசரணையுடன் இருந்தாலும்... பிள்ளைகள் வழக்கம் போல் பாடசாலைக்கு சென்று கல்வி பயின்றாலும்... குடும்பத்தில் மகிழ்ச்சி என்பது மிக மிக குறைவாக இருக்கும்.
இது பல குடும்பங்களில் இயல்பாக இருக்கும். சில குடும்பங்களில் திடீரென்று இத்தகைய நிலை ஏற்படக்கூடும். இதற்கு கண்ணுக்குத் தெரியாத குடும்ப தோஷம் தான் காரணம் என சோதிட நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள் .இந்நிலையில் இது போன்ற மன மகிழ்ச்சியற்ற குடும்பத்தில் சந்தோஷமும், நிம்மதியும் ஏற்படுவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பிரத்யேக வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : எலுமிச்சம் பழ தீபம் மற்றும் தாமரை மலர்.
வெள்ளிக்கிழமைகளில் ராகு கால தருணமான பத்தரை மணி முதல் 12 மணிக்குள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்குள்ள துர்க்கை அம்மன் சன்னதியில் தாமரை மலரை அம்மனின் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து எலுமிச்சை பழ தீபத்தை ஏற்றி மன மகிழ்ச்சியுடன் கூடிய சந்தோஷம் குடும்பத்தில் ஏற்பட வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும். இத்தகைய பிரார்த்தனையை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வெள்ளிக்கிழமைகளில் மேற்கொண்டால்... உங்களுடைய குடும்பத்திற்கு சூட்சமமாகவோ அல்லது செயற்கையாகவோ ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடை மற்றும் மாயத் தடை அகன்று, அசலான அக மகிழ்ச்சி ஏற்படுவதுடன் குடும்பத்தில் சந்தோஷமும் ஏற்படும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM