நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ' அகண்டா 2 :தாண்டவம்' படத்தின் முதல் பாடல் வெளியீடு

15 Nov, 2025 | 05:22 PM
image

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக அதிரடி எக்சன் வேடத்தில் நடித்திருக்கும் 'அகண்டா 2 : தாண்டவம்' எனும் திரைப்படத்தில் இடம்பெறும் 'அகண்டா தாண்டவம்..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகி உள்ள ' அகண்டா 2 : தாண்டவம்' எனும் திரைப்படத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா , சம்யுக்தா , ஆதி , ஹர்ஷாலி மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சி. ராம் பிரசாத் மற்றும் சந்தோஷ் டெடக்கே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ் .தமன் இசையமைத்திருக்கிறார்.

பக்தி கலந்த எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா மற்றும் கோபி சந்த் அச்சந்தா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை எம். தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'அகண்டா தாண்டவம்..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் கல்யாண் சக்கரவர்த்தி திரிபுரனேனி எழுத பின்னணி பாடகர்கள் ஷங்கர் மகாதேவன் மற்றும் கைலாஷ் கேர் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் ஆன்மீக உணர்வை இசை ரசிகர்களிடம் ஏற்படுத்துவதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

நந்தமூரி பாலகிருஷ்ணா - பொயப்பட்டி  ஸ்ரீனு - எஸ். தமன்-  ஷங்கர் மகாதேவன்- கைலாஷ் கேர் ஆகியோர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தப் பாடல் இணையத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னிந்திய திரைத்துறையில் இந்திய மதிப்பில் நான்காயிரம்...

2025-12-10 15:44:22
news-image

அர்ஜுன் தாஸ் உடன் இணையும் மலையாள...

2025-12-10 15:26:44
news-image

மீண்டும் இணையும் ஆதித்யா பாஸ்கர் -...

2025-12-10 15:10:55
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ஜஸ்டிஸ்...

2025-12-10 15:05:40
news-image

நடிகர் ரக்சன் நடிக்கும் 'மொய் விருந்து'...

2025-12-10 14:59:06
news-image

'மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு அர்ப்பணிக்கப்பட்ட திரைப்படம்...

2025-12-10 09:25:58
news-image

நடிகர் குரு லக்ஷ்மன் நடிக்கும் 'ஹார்டிலே...

2025-12-10 09:22:29
news-image

இசை ரசிகர்கள் முணுமுணுக்கும் 'எனக்குள்ளே மாற்றமும்...

2025-12-08 18:13:26
news-image

சூர்யா நடிக்கும் 'சூர்யா 47 '...

2025-12-08 18:07:35
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'படையப்பா' ரிட்டர்ன்ஸ்

2025-12-08 17:09:26
news-image

நடிகை மதுபாலா - இந்திரன்ஸ் இணைந்து...

2025-12-08 17:06:31
news-image

அறிமுக நடிகர் லெனின் நடிக்கும் 'ரெட்...

2025-12-08 17:02:53