“கெஹெல்பத்தர பத்மே”வுக்கு சொந்தமான வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணை செய்ய சி.ஐ.டிக்கு அனுமதி!

15 Nov, 2025 | 03:21 PM
image

தற்போது பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்பவருக்குச் சொந்தமான வங்கி கணக்குகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு, கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு டி சில்வா நேற்று வெள்ளிக்கிழமை (14) உத்தரவிட்டுள்ளார்.

“கெஹெல்பத்தர பத்மே”வுக்கு சொந்தமான வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வழங்கிய கோரிக்கைக்கு இணங்க நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட  பாதாள உலக கும்பலில் இருந்த “பக்கோ சமனின்” மனைவி ஆகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதையடுத்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணையில் விடுதலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

2025-12-15 10:42:22
news-image

மண்சரிவால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி - கண்டி...

2025-12-15 10:30:40
news-image

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள கற்களை...

2025-12-15 10:23:59
news-image

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில்...

2025-12-15 09:57:31
news-image

21 கிலோவுக்கும் அதிகமான 'குஷ்' கஞ்சாவுடன்...

2025-12-15 11:03:40
news-image

கொழும்பு துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு...

2025-12-15 09:51:43
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

2025-12-15 08:59:20
news-image

புதையல் தோண்டிய 06 பேர் கைது!

2025-12-15 09:19:43
news-image

அம்பலாங்கொடை முகத்துவார தேவாலயக் குழுத் தலைவர்...

2025-12-15 09:14:07
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2025-12-15 09:19:00
news-image

நாளை முதல் நாடு முழுவதிலும் மழையுடனான...

2025-12-15 06:09:10
news-image

அனர்த்த நிவாரண விடயங்களில் ஜனாதிபதியின் கருத்துகளில்...

2025-12-15 03:54:13