யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் கைது!

15 Nov, 2025 | 01:19 PM
image

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 05 பேர் கொண்ட கும்பல் ஒன்று வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

வல்வெட்டித்துறை பகுதியில் , போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு கும்பல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் காங்கேசன்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது ஐவரை கைது செய்துள்ளனர்.  

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 01 கிலோ 51 கிராம் கேரள கஞ்சா , 20 கிராம் 620 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் , போதைப்பொருள் வலையமைப்பை பேணியதாக சந்தேகிக்கப்படும் 04 கையடக்க தொலைபேசிகள், போதைப்பொருள் விற்றதன் மூலம் பெறப்பட்ட 15ஆயிரத்து 720 ரூபாய், போதைப்பொருளை விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர். 

கைது செய்யப்பட்ட நபர்களை , வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணையில் விடுதலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

2025-12-15 10:42:22
news-image

மண்சரிவால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி - கண்டி...

2025-12-15 10:30:40
news-image

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள கற்களை...

2025-12-15 10:23:59
news-image

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில்...

2025-12-15 09:57:31
news-image

21 கிலோ 'குஷ்' கஞ்சாவுடன் போதைப்பொருள்...

2025-12-15 11:10:51
news-image

கொழும்பு துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு...

2025-12-15 09:51:43
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

2025-12-15 08:59:20
news-image

புதையல் தோண்டிய 06 பேர் கைது!

2025-12-15 09:19:43
news-image

அம்பலாங்கொடை முகத்துவார தேவாலயக் குழுத் தலைவர்...

2025-12-15 09:14:07
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2025-12-15 09:19:00
news-image

நாளை முதல் நாடு முழுவதிலும் மழையுடனான...

2025-12-15 06:09:10
news-image

அனர்த்த நிவாரண விடயங்களில் ஜனாதிபதியின் கருத்துகளில்...

2025-12-15 03:54:13