திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில் கிணற்றில் வீழ்ந்து 15, 16 வயதுடைய சிறுவர்கள் இருவர் பலியாகியுள்ளார்கள். 

திருகோணமலை, தீர்வைநகரைச் சேர்ந்த எம்.ஹேமதரன் (16) மற்றும் ஆனந்தபுரியைச் சேர்ந்த கே.புவிராஜ் (15) ஆகிய இருவருமே, இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

நண்பர்களான மேற்படி இருவரும் இன்று பகல் ஆனந்தபுரியிலுள்ள பொதுக் கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றபோதே, நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பலியான சிறுவர்களின் பிரேத பரிசோதனைகள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.