பாபர் அஸாம் சதம், ஸமான், ரிஸ்வான் அரைச் சதங்கள் குவிப்பு, இலங்கையுடனான தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் 

Published By: Vishnu

15 Nov, 2025 | 10:42 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாபர் ஸமான் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதத்தின் உதவியுடன் பாகிஸ்தான் 8 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

பக்கார் ஸமான், மொஹம்மத் ரிஸ்வான் ஆகியோரும் அரைச் சதங்கள் குவித்து இந்த வெற்றியில் சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்தனர்.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்க  இப்போதைக்கு 2 - 0 என தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 289 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 48.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 289 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

பாகிஸ்தான் முன்வரிசை வீரர்கள் அனைவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடியதுடன் சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி இலங்கை பந்துவீச்சாளர்களை சிதறடித்தனர்.

பக்கார் ஸமான், சய்ம் அயூப் ஆகிய இருவரும் 58 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அயூப் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

இதனைத் தொடர்ந்து களம் புகுந்த முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் 2ஆவது விக்கெட்டில் பக்கார் ஸமானுடன் 100 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் மற்றொரு முன்னாள் தலைவர் மொஹம்மத் ரிஸ்வானுடன் 122 ஓட்டங்களையும் பகிர்ந்து பாகிஸ்தானை வெற்றி அடையச் செய்தார்.

பக்கார் ஸமான் 78 ஓட்டங்;களையும் பாபர் அஸாம் ஆட்டம் இழக்காமல் 102 ஓட்டங்களையும் மொஹமத் ரிஸ்வான் ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது போட்டியில் போன்றே முன்வரிசை வீரர்கள் எதிர்பார்த்தளவு பிரகாசிக்காத நிலையில் மத்திய வரிசை வீரர்கள் நால்வர் 35 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதன் பலனாக இலங்கை கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

ஜனித் லியனகே திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததுடன் இரண்டு முக்கிய இணைப்பாட்டங்களில் பங்காற்றி இருந்தார்.

பவர் ப்ளேயில் பெத்தும் நிஸ்ஸன்கவும் காமில் மிஷாரவும் வேகமாகத் துடுப்பெடுத்தாடி ஆரம்ப விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்துகொடுத்தனர்.

ஆனால், பெத்தும் நிஸ்ஸன்க (24), காமில் மிஷார (27), குசல் மெண்டிஸ் (20),  அணித் தலைவர்  சரித் அசலன்க ஆகியோர் (7) சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (98 - 4 விக்.)

இந் நிலையில் சதீர சமரவிக்ரமவும் ஜனித் லியனகேவும் 5ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உயிர்கொடுத்தனர்.

சதீர சமரவிக்ரம 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு பலமான நிலையில் இட்டனர்.

ஆனால், கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 54 ஓட்டங்களையும்   பெற்று  9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். 

வனிந்து ஹசரங்க  37 ஓட்டங்களுடனும் ப்ரமோத் மதுஷான் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 9 ஆவது விக்கெட்டில் 44 ஒட்டங்களைப் பகிர்ந்;தனர்.

பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 66 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: பாபர் அஸாம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்காவை துவம்சம் செய்து ஒருநாள்...

2025-12-06 23:15:44
news-image

பீபா உலகக் கிண்ணம் 2026 -...

2025-12-06 23:13:18
news-image

நியூஸிலாந்துடனான டெஸ்டை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டது...

2025-12-06 17:25:02
news-image

இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு...

2025-12-05 23:21:18
news-image

வரலாற்றில் மிகப் பெரிய பீபா உலகக்...

2025-12-05 20:17:23
news-image

531 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி...

2025-12-05 14:56:49
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது இளையோர் 3 நாள்...

2025-12-05 14:00:08
news-image

இலங்கை வீரர் பெத்தும் நிஸ்ஸன்கவின் அரைச்...

2025-12-05 13:01:48
news-image

இலங்கையை மீளக் கட்டி எழுப்பும் நிதிக்கு...

2025-12-04 19:47:32
news-image

மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்டில் டொம் லெதம்,...

2025-12-04 15:39:58
news-image

லிவிங்ஸ்டோன் அதிரடி துடுப்பாட்டம்;  அபு தாபி...

2025-12-04 15:28:47
news-image

இந்தியாவுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2025-12-04 04:52:56