பும்ராவின் 5 விக்கெட் குவியலின் பலனாக தென் ஆபிரிக்காவை 159 ஓட்டங்களுக்கு சுருட்டியது இந்தியா

Published By: Vishnu

14 Nov, 2025 | 06:36 PM
image

(நெவில் அன்தின)

கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா பதிவுசெய்த 5 விக்கெட் குவியலின் உதவியுடன் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்காவை முதல் இன்னிங்ஸில் 159 ஓட்டங்களுக்கு இந்தியா சுருட்டியது.

இந்தியாவில் எட்டு முயற்சிகளில் முதல் தடவையாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்கா, துணிந்து துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தபோதிலும் அவ்வணி ஒருநாள் போட்டியை ஒத்தது போன்று துடுப்பெடுத்தாடி 55 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது.

ஏய்டன் மார்க்ராம், ரெயான் ரிக்ல்டன் ஆகிய இருவரும் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். 

ஆனால், அதன் பின்னர் தென் ஆபிரிக்காவின் 10 விக்கெட்களும் 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டன.

51ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜஸ்ப்ரிட் பும்ரா ஓர் இன்னிங்ஸில் தனது 16ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்ததுடன் மொஹமத் சிராஜ், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல் ஆகியோர் மற்றைய 5 விக்கெட்களை வீழ்த்தி தென் ஆபிரிக்காவை திக்குமுக்காட வைத்தனர்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த தென் ஆபிரிக்க ஆரம்ப வீரர்களான ரெயான் ரிக்ல்டன், ஏய்டன் மார்க்ராம் ஆகிய இருவரையும் 4 பந்துகள் இடைவெளியில் பும்ரா ஆட்டம் இழக்கச் செய்து போட்டியில் இந்தியாவுக்கு சாதகமான திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

அதன் பின்னர் பொறுமையுடன் துடுப்பெடுத்தாட முயற்சித்த அணித் தலைவர் டெம்பா பவுமா, வியான் மல்டர் ஆகிய இருவரை குல்தீப் யாதவ் ஆட்டம் இழக்கச் செய்ததும் தென் ஆபிரிக்கா ஆட்டம் காணத் தொடங்கியது.

தென் ஆபிரிக்க துடுப்பாட்டத்தில் ஏய்டன் மார்க்ராம் (31), வியான் மல்டர் (24), டோனி டி ஸோர்ஸி (24), ரெயால் ரிக்ல்டன் (23) ஆகிய நால்வரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 5 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹம்மத் சிராஜ் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இந்தியா முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதமிருக்க தென் ஆபிரிக்காவைவிட 122 ஓட்டங்களால் இந்தியா பின்னிலையில் இருக்கிறது.

யஷஸ்வி ஜய்ஸ்வால் 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். கே.எல். ராகுல் 13 ஓட்டங்களுடனும் புதிய 3ஆம் இலக்க வீரர் வொஷிங்டன் சுந்தர் 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட 19இன்கீழ் இலங்கை...

2026-07-16 20:31:40
news-image

கொழும்பு SSC மைதானத்தில் LPL தொடக்க...

2026-07-16 20:26:18
news-image

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம்,...

2026-07-16 18:24:57
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலை விரைவில் நடத்துமாறு...

2026-07-16 15:53:48
news-image

போக்லண்ட் பதாகையை ஏந்தியதால் ஆர்ஜன்டினா மீது...

2026-07-16 18:22:47
news-image

தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர்...

2026-07-16 15:04:06
news-image

தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டுவந்து இங்கிலாந்தை...

2026-07-16 09:29:57
news-image

இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு...

2026-07-15 20:55:07
news-image

இறுதிப் போட்டிக்கு குறிவைத்து  உலகக் கிண்ண...

2026-07-15 19:34:55
news-image

MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ்...

2026-07-15 17:03:21
news-image

பிரான்ஸை எளிதாக வெளியேற்றிய ஸ்பெய்ன் உலகக்...

2026-07-15 09:45:43
news-image

ஐரோப்பிய பலவான்கள் பிரான்ஸ் - ஸ்பெய்ன்...

2026-07-14 21:51:19