பிக்கிள் பால் விளையாட்டுப் போட்டி வீரர்களை ஊக்கப்படுத்திய இந்திய மகளிர் துடுப்பாட்ட அணியின் கப்டன் ஹர்மன்பிரித் கவுர்! 

14 Nov, 2025 | 06:35 PM
image

இளைய தலைமுறையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களிடம் பிரபலமாகி வரும் பிக்கிள் பால்   (Pickle Ball) உள்ளரங்க விளையாட்டில் பயிற்சி மற்றும் போட்டியில் பங்குபற்றும் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்திய மகளிர் துடுப்பாட்ட அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் நேரில் வருகை தந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னையின் புறநகரில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட உள் விளையாட்டரங்கில் ஆண் - பெண் மற்றும் பல்வேறு வயதினருக்கு இடையேயான தேசிய அளவிலான பிக்கிள் பால் போட்டி நடைபெறுகிறது. 

இந்தப் போட்டியை காணவும், போட்டியில் பங்குபற்றும் வீரர்களுக்கு ஊக்கமளிக்கவும் அண்மையில் உலகக் கிண்ணத்தை வெற்றி பெற்ற இந்திய மகளிர் துடுப்பாட்ட அணியின் கப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பு அதிதியாக பங்குபற்றினார்.

இந்தியா மட்டுமல்லாமல், தெற்காசிய நாடுகளில் விளையாடி வரும் மகளிர் துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கு உற்சாகமளிக்கும் முன்னுதாரண அடையாளமாக மாற்றம் பெற்ற ஹர்மன்பிரீத் கவுர் உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு பல நிகழ்வுகளில் சிறப்பு அதிதியாக பங்குபற்றி வருகிறார். 

அந்த வகையில் சென்னையில் நடைபெறும் பிக்கிள் பால் போட்டியில் பங்குபற்றும் வீரர்களுக்கு உற்சாகமளிப்பதற்காக அவர் சென்னைக்கு முதன்முறையாக வருகைதந்தார். அவரை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன பல்கலைக்கழகத்தின் வேந்தரான டொக்டர் மரியா சீனா ஜான்சன்  வரவேற்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்