மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட கீர்த்தி சுரேசின் ' ரிவால்வர் ரீட்டா' பட முன்னோட்டம்

14 Nov, 2025 | 06:02 PM
image

முன்னணி பான் இந்திய நட்சத்திர நடிகையான கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக கனமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரிவால்வர் ரீட்டா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் ஜே கே சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரிவால்வர் ரீட்டா' எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், சுப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜோன் விஜய், காயத்ரி ஷான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். அவல நகைச்சுவையை மையப்படுத்தி கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபேசன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் 28 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினரும் ..நிழல் உலக தாதா ஒருவரின் அசாதாரணமான மரணம் தொடர்பான காட்சிகள் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இடம் பிடித்திருப்பதால்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னிந்திய திரைத்துறையில் இந்திய மதிப்பில் நான்காயிரம்...

2025-12-10 15:44:22
news-image

அர்ஜுன் தாஸ் உடன் இணையும் மலையாள...

2025-12-10 15:26:44
news-image

மீண்டும் இணையும் ஆதித்யா பாஸ்கர் -...

2025-12-10 15:10:55
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ஜஸ்டிஸ்...

2025-12-10 15:05:40
news-image

நடிகர் ரக்சன் நடிக்கும் 'மொய் விருந்து'...

2025-12-10 14:59:06
news-image

'மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு அர்ப்பணிக்கப்பட்ட திரைப்படம்...

2025-12-10 09:25:58
news-image

நடிகர் குரு லக்ஷ்மன் நடிக்கும் 'ஹார்டிலே...

2025-12-10 09:22:29
news-image

இசை ரசிகர்கள் முணுமுணுக்கும் 'எனக்குள்ளே மாற்றமும்...

2025-12-08 18:13:26
news-image

சூர்யா நடிக்கும் 'சூர்யா 47 '...

2025-12-08 18:07:35
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'படையப்பா' ரிட்டர்ன்ஸ்

2025-12-08 17:09:26
news-image

நடிகை மதுபாலா - இந்திரன்ஸ் இணைந்து...

2025-12-08 17:06:31
news-image

அறிமுக நடிகர் லெனின் நடிக்கும் 'ரெட்...

2025-12-08 17:02:53