மெட்ராஸ் மாஃபியா கம்பனி - திரைப்பட விமர்சனம்

14 Nov, 2025 | 05:46 PM
image

மெட்ராஸ் மாஃபியா கம்பனி - திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : அண்ணா புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள் : ஆனந்தராஜ், சம்யுக்தா, தீபா, சசிலயா, ராம் தாஸ் , ஆராத்யா மற்றும் பலர்.

இயக்கம் : ஏ. எஸ். முகுந்தன்

மதிப்பீடு : 2/5

வில்லனாக அறிமுகமாகி பிரபலமான நடிகர் ஆனந்தராஜ் அண்மைக்காலமாக நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'மெட்ராஸ் மாஃபியா கம்பனி'.  இப்படத்தின் பெயரில் இருக்கும் வித்தியாசம் படத்திலும் இருந்ததா ? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

சென்னை முழுவதும் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு ரவுடியை தன்னுடைய பிரதிநிதியாக நியமித்து மாமூல் வசூல் செய்வதுடன் சட்டவிரோத குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர் பூங்காவனம் (ஆனந்தராஜ்) . இவர் அனைத்து வகையினதான குற்ற செயல்களை செய்தாலும் காவல்துறையின் பதிவேட்டில் இவருடைய பெயரோ.. புகைப்படமோ இருக்காது.

அந்த அளவிற்கு காவல்துறையின் ஆதரவையும், அதன் நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டு தொடர்ந்து யாராலும் வீழ்த்த இயலாத ரவுடியாக திகழ்கிறார் பூங்காவனம்.

இவரது பலவீனங்களை பயன்படுத்தி ஏதேனும் பழைய குற்ற சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களை திரட்டி அவர் மீது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்து கைது செய்ய வேண்டும் என விரும்பும் காவல்துறை - தனிப்படை அமைத்து அதற்கு திகழ் பாரதி ( சம்யுக்தா) எனும் பெண் காவல்துறை உயரதிகாரியை நியமிக்கிறது.

இவர் தனது தலைமையின் கீழ் மூன்று காவலர்களை வைத்துக்கொண்டு பூங்காவனத்தை துல்லியமாக அவதானித்து ஆதாரங்களை திரட்டி கைது செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்.

இந்நிலையில் தொழில் போட்டி காரணமாக பூங்காவனத்தை கொலை செய்ய வேண்டும் என அவருடைய போட்டியாளர்களும் திட்டமிடுகிறார்கள். இவர்களின் வலையில் சிக்காமல் பூங்காவனம் தப்பித்தாரா? இல்லை சிக்கினாரா ? என்பது தான் இப்படத்தின் கதை.

பூங்காவனமாக நடித்திருக்கும் ஆனந்தராஜ் வாய்ப்பு கிடைக்கும் போது வில்லனாகவும், ஏனைய தருணங்களில் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகராகவும் கலந்து கட்டி நடித்து அந்த கதாபாத்திரத்தை செதுக்கியிருக்கிறார். இதனால் சில இடங்களில் எரிச்சலும், சில இடங்களில் லேசாக சிரிப்பும் வருகிறது.

காவல்துறை அதிகாரி திகழ் பாரதியாக நடித்திருக்கும் நடிகை சம்யுக்தா-  சீருடையில் கம்பீரமாக இருந்தாலும் காட்சிகளில் இயல்பான அளவை விட கூடுதலாக நடித்து ரசிகர்களை சோதிக்கிறார். ஆனால் ஆக்சன் காட்சிகளில் அதகளம் செய்கிறார்.

கொண்டித் தோப்பு வரதன் இடம் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முனிஸ்காந்த் சிரிப்பை வரவழைக்க போராடுகிறார். அதற்கு அவருடைய உடல் மொழியும், உச்சரிப்பும் ஒத்துழைக்கவில்லை. 

ஒளிப்பதிவாளரும்,  இசையமைப்பாளரும் இது குறைந்த முதலீட்டு திரைப்படம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தங்களுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

தயாரிப்பாளரின் கதை என்பதால் இயக்குநர் தம்மால் முடிந்த அளவிற்கு வணிகத்தனம் கலந்த படைப்பாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அதில் அவர் பாதி கிணறு கூட தாண்டவில்லை. 

மெட்ராஸ் மாஃபியா கம்பனி - தரமான முத்திரை - போலியான சரக்கு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னிந்திய திரைத்துறையில் இந்திய மதிப்பில் நான்காயிரம்...

2025-12-10 15:44:22
news-image

அர்ஜுன் தாஸ் உடன் இணையும் மலையாள...

2025-12-10 15:26:44
news-image

மீண்டும் இணையும் ஆதித்யா பாஸ்கர் -...

2025-12-10 15:10:55
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ஜஸ்டிஸ்...

2025-12-10 15:05:40
news-image

நடிகர் ரக்சன் நடிக்கும் 'மொய் விருந்து'...

2025-12-10 14:59:06
news-image

'மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு அர்ப்பணிக்கப்பட்ட திரைப்படம்...

2025-12-10 09:25:58
news-image

நடிகர் குரு லக்ஷ்மன் நடிக்கும் 'ஹார்டிலே...

2025-12-10 09:22:29
news-image

இசை ரசிகர்கள் முணுமுணுக்கும் 'எனக்குள்ளே மாற்றமும்...

2025-12-08 18:13:26
news-image

சூர்யா நடிக்கும் 'சூர்யா 47 '...

2025-12-08 18:07:35
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'படையப்பா' ரிட்டர்ன்ஸ்

2025-12-08 17:09:26
news-image

நடிகை மதுபாலா - இந்திரன்ஸ் இணைந்து...

2025-12-08 17:06:31
news-image

அறிமுக நடிகர் லெனின் நடிக்கும் 'ரெட்...

2025-12-08 17:02:53