எம்மில் பலரும் சமூகத்தில் பங்களிப்பு செய்யும் தருணங்களில் அல்லது உயர்கல்வியை கற்ற பிறகு சொந்தமாக சம்பாதிக்க தொடங்கும் காலகட்டத்தில் தொழில் பற்றிய எண்ணங்கள் எழுவதுண்டு.
தொழில் செய்யலாம் என சிந்திக்கும் போதெல்லாம் ஏதேனும் ஒரு வகையில் குடும்ப உறுப்பினர்களே அதற்கு தடையாகவும், தாமதத்தையும் உண்டாக்குவார்கள்.
இவர்களைக் கடந்து நண்பர்களின் ஆலோசனை பெற்று, நிதி உதவியும் பெற்று தொழிலை தொடங்கினால்... அந்த தொழிலை தொடங்கும் போது இருந்த ஆர்வம் எதிர்பார்த்த வகையில் லாபம் கிடைக்காத போதோ அல்லது வாடிக்கையாளர்களின் வருகை குறையும் போதோ .. மெல்ல மெல்ல மறைய தொடங்கும்.
தொழிலை நடத்தி அதன் சூட்சுமங்களை உணர்ந்த பிறகு இன்னும் சிறிது காலம் நடத்தினால் ... லாபம் ஏற்படும் என எண்ணும் தருணங்களில், வேறு வழி இல்லாமல் தொழிலை கைவிட்டவர்கள் பலர்.
இந்நிலையில் இது போன்ற தருணங்களில் நீங்கள் மேற்கொண்டிருக்கும் தொழிலில் தடை ஏதும் இல்லாமல் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாமல் ஈட்ட வேண்டும் என்றால்.. அதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான குறிப்பினை வழங்கி இருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : முடவாட்டுக் கிழங்கு
நாட்டு மருந்து கடைகளில் விற்பனையாகும் முடவாட்டுக் கிழங்கு எனும் அரிய மூலிகையை வியாழக்கிழமைகளில் வாங்கி வந்து, அதனை வெள்ளிக்கிழமையில் காலை ஏழு மணி முதல் எட்டு மணிக்குள் நீங்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் அல்லது தொழில் நடத்தும் அலுவலகத்தில் உள்ள பணப்பெட்டியில் வைத்து விட வேண்டும்.
வைப்பதற்கு முன் அந்த முடவாட்டுக் கிழங்கில் மஞ்சளை பூசி முறையாக வணங்கிட வேண்டும். இதனை தொடர்ச்சியாக வாரந்தோறும் மேற்கொள்ளும் போது உங்களுடைய தொழிலில் இருந்து வந்த தடைகள் அகன்று, தொழில் வளர்ச்சி அடைவதை அனுபவத்தில் உணரலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM