(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டில் புரையோடிப்போயுள்ள போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கு ஜனாதிபதி எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டுவதுடன் அதற்கு தேவையான பூரண ஆதரவை வழங்கவும் தயாராக இருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான ஆறாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டிள் அனைத்து தரப்பினரிடமும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. அதனால் இந்த போதைப்பொருள் வியாபாரத்தை ஒழிப்பதற்கு ஜனாதிபதி எடுத்துவரும் முயற்சிக்கு எமது பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறோம். அதேநேரம் போதைப்பொருள் ஒழிப்புக்காக வரவு செலவு திட்டத்தில் 1200 மில்லியன் ரூபா ஒதுக்கி இருப்பதை பாராட்டுகிறேன்.
ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவு திட்டத்தில் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும், தொழில் துறைகளை முன்னேற்றுவதற்கும் பல முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.
அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோன்று எமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் மலையக மக்கள், தங்களின் நாளாந்த சம்பளத்தை கூட்டித்தருமாறு பல வருடங்களாக தெரிவித்து வருகின்றனர். அரசாங்கங்கள் கம்பனிகளுடன் கலந்துரைடிவந்தபோதும் அதனை அதிகரித்துக்கொடுக்க முடியாமல் போனது.
முதல் தடவையாக இந்த அரசாங்கம், அரசாங்கத்தில் இருந்து 200 ரூபாவை அதிகரித்து வழங்க தீர்மானித்திருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும். இது மலையகத்தில் வாழும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதரத்துக்கு பாரிய சக்தியாக அமையும்.
மேலும் கடந்த வரவு செலவு திட்டத்தில் கிழக்கு மாகாணத்துக்கு எந்த ஒதுக்கீட்டையும் இந்த அரசாங்கம் மன்வைக்கவில்லை. இதுதொடர்பில் ஜனாதிபதியிடம் கேட்டபோது, இந்திய அரசாங்கத்தினால் உதவிகளை பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்தார். ஆனால் 2025ஆம் ஆண்டுக்கு கிழக்கு மாகாணத்துக்கு இந்திய அரசாங்கத்தால் எந்த நிதியையும் வழங்கவில்லை. இலங்கை அரசாங்கமும் தரவில்லை.
அதனால் இந்த வருடம் கைவிடப்பட்ட சமூகமாகவே கிழக்கு மாகாணம் காணப்பட்டது. ஆனால் இந்தமுறை வரவு செலவு திட்டத்தில் மர்ஹூம் அஷ்ரப்பின் நினைவாக நிந்தவூரில் கட்டப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டிருக்கும் கலாசார மண்டபத்தை பூர்த்திசெய்வதற்கு 300 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ஒதுக்கி இருக்கிறார். அதற்காக எமது கட்சி சார்ப்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.வாழைச்சேனை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கும் 300 மில்லியன் ரூபா ஒதுக்கி இருப்பதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேவேளை, நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்தி 50ஆயிரம் வருமானம் பெறும் வர்த்தக நிலையங்கள் வரி செலுத்த வேண்டும் என்ற நிலையே இதுவரை இந்துவந்தது. அதனை தற்போது இந்த வரவு செலவு திட்டம் மூலம் ஒரு லட்சம் வருமானம் பெறும் வர்த்தகர்கள் 20.5 வீத வரி செலுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதன் மூலம் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்று ஒரு சாதாரண கடை ஒன்றில் கூட ஒருலட்சம் ரூபாவுக்கு வியாபாரம் நடக்கும்.
இவ்வாறு இவர்களிடம் 20வீத வரி அறவிட்டால், அவர்கள் பொருட்களின் விலையை அதிகரித்து, அதனை பொது மக்களிடம் இருந்தே அறவிடுவார்கள்.இது கிராமப்புர மக்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் ஜனாதிபதி இதுதொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM