(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
அரச நிதியை மோசடி செய்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளம் வழங்குவதை எதிர்க்கிறார்கள். வழங்கிய வாக்குறுதிக்கு அமைய 200 ரூபா சம்பளத்தை வங்குவோம் என்று பெருந்தோட்ட மக்களுக்கு உறுதியளிக்கிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தான் அரசாங்கத்தை பொறுப்பேற்றோம்.நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அரச சேவையை வினைத்திறனாக்குவதற்கு டிஜிட்டல் மயப்படுத்தலுக்காக பல மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சம்பள அதிகரிப்புக்கு 11 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்களுக்கான 200 ரூபா சம்பள அதிகரிப்பு பற்றி எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்தை குறிப்பிடுகிறார்கள். அரச நிதியை மோசடி செய்து நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள் தான் பெருந்தோட்ட மக்களுக்கான சம்பள அதிகரிப்பை எதிர்க்கிறார்கள்.
குறிப்பிட்டதைப் போன்று பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளத்தை வழங்குவோம். பெருந்தோட்ட மக்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் பிரதான பங்காளியாக உள்ளார்கள். அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றவாளிகள் கைது செய்யப்படும் போது அவர்களின் விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிடுவது குறித்து பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட சுற்றறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்தை குறிப்பிடுகிறார்கள். விசாரணைகளுக்க பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என்றே பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டிருந்தார்.
ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதை தடுக்க வேண்டிய தேவையோ அல்லது நோக்கமோ அரசாங்கத்துக்கு கிடையாது. எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டவர்கள் தற்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவுப்படுத்தவே போராட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிடுகிறார்கள். அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் எதிர்க்கட்சியினருக்கே எதிரானதாக அமையும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM