(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பை நாங்கள் எதிர்க்கவில்லை. பெருந்தோட்ட தமிழர்களுக்கும்,வடக்குத் தமிழர்களுக்கும் வரலாற்று காலம் முதல் இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த வரவு - செலவுத் திட்டத்தில் தீர்வேதும் முன்வைக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பை நாங்கள் எதிர்க்கவில்லை. பெருந்தோட்ட தமிழர்களுக்கும், வடக்குத் தமிழர்களுக்கும் வரலாற்று காலம் முதல் இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
ஜனாதிபதி வரவு - செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் உரையாற்றுகிறாரா என்று எனக்குத் தோன்றியது.
அரச நிறுவனங்களை மறுசீரமைக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் யோசனைகளை வரவு - செலவுத் திட்டத்தின் முன்வைத்துள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியதையிட்டு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அட்டைப்பூச்சி இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதை போன்று வரிகளை விதித்து திறைசேரி நிரம்பியுள்ளது. இதனை தவிர்த்து தேசிய உற்பத்திகள் அல்லது வெளிநாட்டு முதலீடுகளினால் திறைசேரியின் கையிறுப்பு அதிகரிக்கப்படவில்லை.
வரிகளையும், அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் அதிகரித்து தேசிய கையிறுப்பை அதிகரிக்க முடியும். அதேபோல் ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல், வரவு - செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யவும் முடியும்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் ஒன்றுமில்லை. போலியான வாக்குறுதிகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்துங்கள்.
வடக்குக்கு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளுங்கள்.அதனை விடுத்து போலியான குற்றச்சாட்டுக்களையும், வாக்குறுதிகளை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்காதீர்கள் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM