குழப்பகரமான சூழ்நிலைக்கு பின்னர் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் களத்தில்

14 Nov, 2025 | 01:37 PM
image

(நெவில் அன்தனி)

பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து ஒரு நாள் பிற்போடப்பட்ட இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெறவுள்ளது.

இலங்கை வீரர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்தப் போட்டியில் விளையாடவுள்ளனர்.

இஸ்லாமாபாத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் 48 மணி நேரம் நிலவிய கொந்தளிப்பான நிலைக்குப் பின்னர் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு இந்தத் தொடரையும் அதன் பின்னர் மும்முனைத் தொடரையும் ராவல்பிண்டியில் தொடர  ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

இந்தத் தொடர்களில் இலங்கை அணியினர் தொடர்ந்து விளையாடவுள்ளதை அடுத்து, 'இலங்கை அணியினருக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கும் நன்றி' என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்ட ஒளிநாடாவில் பாகிஸ்தான் அணித் தலைவர் ஷஹீன் ஷா அப்றிடி தெரிவித்துள்ளார்.

'நீங்கள் கடினமான காலங்களில் எங்களுக்கு ஆதரவளித்தீர்கள், நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராவல்பிண்டியில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆறு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கல் முன்னிலையில் இருக்கிறது.

இந் நிலையில் இரண்டாவது போட்டியிலும் வெற்றியீட்டி தொடரைக் கைப்பற்ற பாகிஸ்தானும், எதிரணிக்கு பதிலடி கொடுத்து தொடரை சமப்படுத்த இலங்கையும் முயற்சிக்கவுள்ளன.

எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் யார் வெற்றிபெறுகின்றனர் என்பதை விட இலங்கை வீரர்கள் தொடர்களை நிறைவுசெய்து பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என்பதே இலங்கையர் அனைவரினதும் பிரார்த்தனையாக இருக்கிறது.

முதலாவது போட்டியில் இரண்டு கட்டங்களில் ஆட்டத்தின் பிடியைத் தளரவிட்ட இலங்கை, அப் போட்டியில் இழைத்த தவறுகளைத் திருத்திக்கொண்டு இன்றைய போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

மேலும் இரண்டாவது போட்டியில் இலங்கை வெற்றிபெறுவதாக இருந்தால் சகலதுறைகளிலும் பிரகாசிப்பது அவசியமாகும்.

முதலாவது போட்டியில் அறிமுகமாகி திறமையாகத் துடுப்பெடுத்தாடிய காமில் மிஷார இன்றைய போட்டியில் பொறுமையைக் கடைப்பிடித்து துடுப்பெடுத்தாடி கணிசமான ஓட்டங்ளை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே ஆகியோரும் சிறந்த பங்களிப்பு வழங்குவது அவசியமாகும்.

முதலாவது போட்டியில் வனிந்து ஹசரங்க துணிச்சலுடன் ஆக்ரோஷமாக துடுப்பெடுத்தாடியிராவிட்டால் இலங்கை படுதோல்வியை சந்தித்திருக்கும்.

மேலும் பந்துவீச்சிலும் இலங்கை வீரர்கள் துல்லியமாக பந்துவீசி பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இது இவ்வாறிருக்க, முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியின்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 50 ஓவர்களை வீசி முடிக்கத் தவறிய பாகிஸ்தான் அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 20 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அணிகள் (பெரும்பாலும்)

இலங்கை: காமில் மிஷார, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க (தலைவர்), கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன, அசித்த பெர்னாண்டோ.

பாகிஸ்தான்: பக்கார் ஸமான், சய்ம் அயூப், பாபர் அஸாம், மொஹம்மத் ரிஸ்வான், சல்மான் அகா, ஹுசெய்ன் தலாத், மொஹம்மத் நவாஸ், பாஹீம் அஷ்ரப், ஷஹீன் ஷா அப்றிடி (தலைவர்), ஹரிஸ் ரவூப், நசீம் ஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஆப்கானிஸ்தானுக்கு...

2025-12-17 18:02:45
news-image

ஒலிம்பிக் நிர்வாக சபையின் பதவிக்காலம் முடிவடைந்ததும்...

2025-12-17 17:21:39
news-image

பொண்டி தாக்குதலில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி...

2025-12-17 17:19:28
news-image

எதிர்கால மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை...

2025-12-17 15:11:02
news-image

ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர்...

2025-12-17 01:20:12
news-image

இலங்கை மகளிர் அணியில் இரண்டு கை...

2025-12-17 01:15:02
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: மலேசியாவை...

2025-12-17 01:10:43
news-image

பிரமோத்ய விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய இலங்கை...

2025-12-16 19:07:35
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ண தனிநபருக்கான...

2025-12-16 17:02:39
news-image

ஷார்ஜா வொரியர்ஸை வெற்றிப் பெறச் செய்தார்...

2025-12-16 14:42:13
news-image

ஆசிய இளையோர் பரா விளையாட்டில் இலங்கையின்...

2025-12-16 14:05:45
news-image

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் டி.எஸ்....

2025-12-16 09:52:29