இந்தியா - கர்நாடகாவில் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை

Published By: Digital Desk 3

14 Nov, 2025 | 02:02 PM
image

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பெண் பணியாளர்களின் நலனிற்காகவும் மற்றும் பணியிடத்தில் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்காகவும், மாதவிடாய் விடுப்பு கொள்கையை கர்நாடக அரசு உருவாக்கி உள்ளது.

அதன்படி, அரசு, தனியார் நிறுவனங்கள், ஆடை, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஒரு மாதத்தில் சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்க கர்நாடக மந்திரி சபை கடந்த மாதம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் கட்டாய விடுப்பு வழங்குவதற்கான ஆணை பிறப்பித்த கர்நாடக அரசு இன்று பிறப்பித்துள்ளது.

அதன்படி, 18 முதல் 52 வயதுடைய பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய கட்டாயம் விடுப்பு வழங்கப்படவேண்டும். விடுப்பு எடுப்பதற்கு பெண்கள் எந்தவித மருத்துவ ஆவணங்களையும் சமர்ப்பிக்கவேண்டியதில்லை. அதேவேளை, ஒரு மாதத்தில் மாதவிடாய் கால விடுப்பு எடுக்கவில்லையென்றால் அந்த விடுப்பை அடுத்த மாதம் சேர்த்து (2 நாட்களாக) எடுக்க முடியாது என கர்நாடக அரசு பிறப்பித்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெல்ஜியத்தில் பயங்கர சோகம் ; பிரஸ்ஸல்ஸ்...

2026-07-15 09:40:24
news-image

ஈரானில் எல்லாம் அழிந்துவிட்டது ; மொஜ்தபா...

2026-07-14 13:04:47
news-image

சவூதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்...

2026-07-14 12:58:29
news-image

ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 கப்பல்கள்...

2026-07-14 12:28:49
news-image

நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிர்தப்பிய நபர்!

2026-07-14 12:27:48
news-image

மத்திய கிழக்கு பதற்றம்: உலக சந்தையில்...

2026-07-14 07:20:14
news-image

தண்ணீர் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு...

2026-07-13 16:16:01
news-image

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர்...

2026-07-13 14:15:05
news-image

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால்...

2026-07-13 11:56:10
news-image

பங்களாதேஷில் கடும் மழை : வெள்ளப்...

2026-07-13 10:51:37
news-image

வெனிசுவேலாவை உலுக்கிய இரட்டை பூமியதிர்ச்சி: பலி...

2026-07-13 10:59:16
news-image

ஐரோப்பாவில் வெப்ப அலையினால் ஜூன் மாத...

2026-07-13 09:44:43