முல்லைத்தீவு உள்ளக அரங்கில் மாகாண மல்யுத்த பயிற்சி நெறி

14 Nov, 2025 | 12:49 PM
image

வடக்கு மாகாண  விளையாட்டுத்துறை   திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை    பிரிவின் ஒழுங்கமைப்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு நாள் மல்யுத்த பயிற்சி நெறி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

வடக்கு மாகாண  விளையாட்டுத்துறை   திணைக்களத்தின் குறித்தொதுக்கபட்ட (PSDG) நிதி ஒதுக்கீட்டில் நடத்தப்பட்ட

இந்த மல்யுத்த பயிற்சி நெறியில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 60 வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து மாத்திரம் 50 வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

துரதிர்ஷ்டவசமாக இந்த பயிற்சி நெறியில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து எவரும் பங்குபற்றவில்லை.

இந்த பயிற்சி நெறியை தேசிய மல்யுத்த பயிற்றுநர்கள் வீ. திருச்செல்வம் (மட்டக்களப்பு), என். நிஷேத் ஆகியோர் நடத்தினர்.

முல்லைத்தீவு   மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பயிற்சி நெறியை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ஏ. உமாமகேஸ்வரன், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரச அதிபர் எஸ். மஞ்சுளாதேவி, விளையாட்டுத்துறை திணைக்களத்தின் சிரேஷ்ட மாவட்ட தலைமைப்பீட விளையாட்டுத்துறை அலுவலர் எஸ். சதானந்தன், முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், பயிற்றுநர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

(என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஆப்கானிஸ்தானுக்கு...

2025-12-17 18:02:45
news-image

ஒலிம்பிக் நிர்வாக சபையின் பதவிக்காலம் முடிவடைந்ததும்...

2025-12-17 17:21:39
news-image

பொண்டி தாக்குதலில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி...

2025-12-17 17:19:28
news-image

எதிர்கால மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை...

2025-12-17 15:11:02
news-image

ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர்...

2025-12-17 01:20:12
news-image

இலங்கை மகளிர் அணியில் இரண்டு கை...

2025-12-17 01:15:02
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: மலேசியாவை...

2025-12-17 01:10:43
news-image

பிரமோத்ய விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய இலங்கை...

2025-12-16 19:07:35
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ண தனிநபருக்கான...

2025-12-16 17:02:39
news-image

ஷார்ஜா வொரியர்ஸை வெற்றிப் பெறச் செய்தார்...

2025-12-16 14:42:13
news-image

ஆசிய இளையோர் பரா விளையாட்டில் இலங்கையின்...

2025-12-16 14:05:45
news-image

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் டி.எஸ்....

2025-12-16 09:52:29