கிரிக்கெட் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்ததற்காக இலங்கைக்கு பாகிஸ்தான் சட்டமன்றம், செனட் சபை பாராட்டு

Published By: Digital Desk 3

14 Nov, 2025 | 12:36 PM
image

(நெவில் அன்தனி)

கிரிக்கெட் தொடர் மற்றும் மும்முனை கிரிக்கெட்டில் விளையாட தற்போது பாகிஸ்தானில் உள்ள தமது கிரிக்கெட் அணியை திரும்ப அழைக்காததற்காக இலங்கை அரசாங்கத்திற்கும், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானங்களை பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் மற்றும் செனட் சபை ஆகியன நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றின.

சட்ட அமைச்சர் அசாம் நசீர் இந்த தீர்மானத்தை செனட் சபையில் சமர்ப்பித்த சில மணி நேரங்களின் பின்னர்  அதேபோன்ற தீர்மானத்தை   தேசிய சபையில் பாராளுமன்ற விவகார அமைச்சர் டாக்டர் தாரிக் பஸால் சௌத்ரி சமர்ப்பித்தார்.

பாகிஸ்தானில் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தைத் தொடர இலங்கை ஜனாதிபதி, நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இலங்கையின் முழு அரசாங்கத்தின் தனிப்பட்ட முயற்சிகளுக்கு  இந்தத் தீர்மானத்தின் மூலம் தேசிய சபை நன்றி தெரிவித்துள்ளது.

'சகல விதமான அச்சறுத்தல்களையும் மீறி சுற்றுப்பயணத்தைத் தொடர ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட் நிறுவனம்) எடுத்த முடிவை சபை பாராட்டுகிறது' எனவும் அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியினரின் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக தொடர்வதை உறுதி செய்வதில் உள்துறை அமைச்சரும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவருமான மொஹ்சின் நக்வி, பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஆகியோர் எடுத்துக்கொண்ட முழு முயற்சிகளும் இந்த தீர்மானத்தில் பாராட்டுக்களைப் பெற்றது.

முன்னதாக, செனட் சபையில் பேசிய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த இராணுவத் தலைவர் பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் உதவியதாகவும், இது இலங்கை அணியினரை பாகிஸ்தானில் தொடர்ந்து தங்க முடிவு செய்ய வழிவகுத்ததாகவும் கூறினார்.

இஸ்லாமாபாத் நீதித்துறை வளாகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கரிசணைகள் காரணமாக புதன்கிழமையன்று இலங்கை வீரர்கள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப விரும்பினர்.

அப்படி இருந்தும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்பதாக எங்களுக்கு உறுதியளித்த இலங்கை அரசுக்கும், அதன் அணியை திரும்ப அழைக்காததற்கும் நன்றி தெரிவிப்பதாக சட்ட அமைச்சர் அசாம் நசீர் தரார் கூறினார்.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று மற்றும் சகோதர உறவுகளை அங்கீகரிக்கும் தீர்மானத்தை தரார் வாசித்தார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்தும் நியாயமான மற்றும் தாராள மனப்பான்மையையும் பரஸ்பர நம்பிக்கையின் உணர்வையும் பாராட்டினார்.

'இப்போது, பாகிஸ்தான் இராணுவத்தினர், ரேஞ்சர்ஸ் அதிகாரிகள் மற்றும் இஸ்லாமாபாத் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து அவர்களின் (இலங்கை அணியினர்) பாதுகாப்பை நிர்வகித்து வருகின்றனர். மேலும் எங்களது அரச விருந்தினர்களைப் போலவே அவர்களுக்கும் அதே நெறிமுறை மற்றும் பாதுகாப்பை நாங்கள் வழங்குகிறோம்' என உள்துறை அமைச்சர் நக்வி கூறினார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒரு நாள் பிற்போடப்பட்டு ராவல்பிண்டியில் இன்று நடைபெறவுள்ளது. 

https://twitter.com/NAofPakistan/status/1989003496407069154

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர்...

2025-12-17 01:20:12
news-image

இலங்கை மகளிர் அணியில் இரண்டு கை...

2025-12-17 01:15:02
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: மலேசியாவை...

2025-12-17 01:10:43
news-image

பிரமோத்ய விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய இலங்கை...

2025-12-16 19:07:35
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ண தனிநபருக்கான...

2025-12-16 17:02:39
news-image

ஷார்ஜா வொரியர்ஸை வெற்றிப் பெறச் செய்தார்...

2025-12-16 14:42:13
news-image

ஆசிய இளையோர் பரா விளையாட்டில் இலங்கையின்...

2025-12-16 14:05:45
news-image

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் டி.எஸ்....

2025-12-16 09:52:29
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: நேபாளத்தை...

2025-12-16 03:17:32
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஆப்கானிஸ்தானை...

2025-12-15 22:01:55
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வழங்கும் வளங்ளைப் பயன்படுத்தி...

2025-12-15 17:30:09
news-image

மலேசியாவை வெற்றி கொண்டதன் மூலம் ஐக்கிய...

2025-12-15 13:29:22