கொழும்பு – நவம்பர் 4, 2025 – எயிற்கின் ஸ்பென்ஸ் இன்ஸ்டிடியூட் ஒப் ஹோட்டேல் மேனேஜ்மென்ட் , எயிற்கின் ஸ்பென்ஸ் ஹோடேல்ஸ் (Aitken Spence Institute of Hotel Management, Aitken Spence Hotels) நிறுவனத்தின் கல்வி மற்றும் மேம்பாட்டு பிரிவின் ஒரு முக்கிய முயற்சியாக, சமீபத்தில் ஹெரிட்டன்ஸ் அஹுங்கல்லவில் (Heritance Ahungalla) பட்டமளிப்பு விழாவை வெற்றிகரமாக நடத்தியது.
2007ஆம் ஆண்டு நிறுவனத்தின் சமூக பொறுப்பு (CSR) முயற்சியாக தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் மூலம் , டீயூஐ கேர் பௌண்டேஷன் (TUI Care Foundation) மற்றும் வேர்ல்ட் சஸ்டைனபள் ஹாஸ்பிடாலிட்டி அல்லயன்ஸ் (World Sustainable Hospitality Alliance) ஆகியவற்றின் ஆதரவுடன், மாணவர்கள் உலகத் தரமான பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.
ஹெரிட்டன்ஸ் அஹுங்கல்லவில் (Heritance Ahungalla) மற்றும் ஹெரிட்டன்ஸ் கந்தலம (Heritance Kandalama) ஆகிய இடங்களில் உள்ள ஹோட்டல் பள்ளிகளில், மாணவர்கள் உணவு மற்றும் பானம், வீட்டு பராமரிப்பு, தொழில்முறை சமையல் ஆகிய துறைகளில் ஐந்து மாதங்கள் பயிற்சி பெறுகின்றனர். இதுவரை 1,400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டமும் பெற்றுள்ளனர்.
டீயூஐ (TUI) பராமரிப்பு அறக்கட்டளை என்பது உலகின் முன்னணி சுற்றுலா வணிகங்களில் ஒன்றான டீயூஐ (TUI) ஆல் நிறுவப்பட்ட ஒரு சுயாதீனமான தொண்டு நிறுவனமாகும். மேலும் இயற்கை சூழலைப் பாதுகாக்கவும், பயண இடங்களில் சமூகங்களை மேம்படுத்தவும் சுற்றுலாத் துறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.
இம்முறை 46 மாணவர்கள் பட்டம் பெற்றதுடன், Ahungalla கிளையில் பட்டம் பெற்ற அனைவரும் பெண்களாக இருந்தது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். டீயூஐ அகடெமி (TUI Academy) மற்றும் சஸ்டைனபள் ஹாஸ்பிடாலிட்டி அல்லயன்ஸ்
(Sustainable Hospitality Alliance) இணைந்து வழங்கும் ஆதரவின் கீழ், மாணவர்களுக்கு தங்கும் வசதி, உணவு, சீருடைகள் மற்றும் மாதாந்திர ஊதியமும் வழங்கப்பட்டது.
நிறுவனத் தலைவர் ஸ்டஷ்ஷானி ஜெயவர்தன கூறியதாவது: "இளம் நிபுணர்களுக்குத் தேவையான திறன்களையும் நிஜ உலக அனுபவத்தையும் வழங்குவதன் மூலம், அவர்களின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இலங்கையின் விருந்தோம்பல் துறையையும் வலுப்படுத்துகிறோம்."
இந்த விழா, இலங்கையின் விருந்தோம்பல் துறையில் தொழில்முறை திறன்களை வளர்க்கும் எயிற்கின் ஸ்பென்ஸ் (Aitken Spence) நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியது.
எயிற்கின் ஸ்பென்ஸ் ஹோட்டல் மேலாண்மை (Aitken Spence Institute of Hotel Management) நிறுவனம் பற்றி
எயிற்கின் ஸ்பென்ஸ் ஸ்பென்ஸ் ஹோட்டல் மேலாண்மை (Aitken Spence Institute of Hotel Management) நிறுவனம் 2007 ஆம் ஆண்டு எயிற்கின் ஸ்பென்ஸ் (Aitken Spence) ஹோட்டல்களின் கீழ் ஒரு சமூகப் பொறுப்புணர்வு முயற்சியாக நிறுவப்பட்டது. இது கற்றல் மற்றும் மேம்பாட்டுப் பிரிவால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் அஹுங்கல்ல மற்றும் கந்தலமாவில் செயல்பட்டு, பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு முக்கிய விருந்தோம்பல் துறைகளில் பயிற்சி அளிக்கிறது.
டீயூஐ அகடெமி (TUI Academy) மற்றும் சஸ்டைனபள் ஹாஸ்பிடாலிட்டி அல்லயன்ஸ் (Sustainable Hospitality Alliance) கூட்டணியின் ஆதரவுடன், இந் நிறுவனம் 800 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வெற்றிகரமாக பயிற்சி அளித்துள்ளதோடு திறமையான நிபுணர்களை வளர்ப்பதன் மூலம் தொழில்துறையில் ஒரு உறுதியான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எயிற்கின் ஸ்பென்ஸ் ஹோட்டல் (Aitken Spence Hotels பற்றிய தகவல்கள்
ஹெரிட்டன்ஸ் ஹோட்டேல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் (Heritance Hotels and Resorts) என்பது இலங்கையின் முன்னணி ப்ளூ-சிப் கூட்டு நிறுவனமான எயிற்கின் ஸ்பென்ஸ் ஹோட்டல் (Aitken Spence Hotels) யின் ஒரு பகுதியான எயிற்கின் ஸ்பென்ஸ் பிஎல்சி (Aitken Spence PLC) யின் விளம்பர நாமமாகும் .
எயிற்கின் ஸ்பென்ஸ் ஹோட்டல்கள் (Aitken Spence HotelS) இலங்கை, மாலத்தீவுகள், ஓமான் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள 18 ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளின் பல்வேறு தொகுப்பை, ஹெரிட்டன்ஸ் ஹோட்டேல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் (Heritance Hotels and Resorts), ஆதாரான் ஹோட்டேல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் (Adaaran Hotels & Resorts) மற்றும் துர்யா (Turyaa) ஆகிய குறியீடுகள் மூலம் மேற்பார்வையிடுகிறது. இலங்கையில் புகழ்பெற்ற பாவாவின்-வடிவமைப்பைக் கொண்ட ஹோட்டல்களை கொண்டிருக்கும் இந்த தர அடையாளம், அதன் சிறப்புமிக்க கட்டிடக்கலை மற்றும் பாரம்பரியத்துடன் தனித்துவமான அனுபவங்களையும் வழங்குகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM