இலங்கையில் பல்வேறு துறைகளில் மாற்றத்தைக் கட்டியெழுப்பும் Women Mean Business Coalition

14 Nov, 2025 | 11:40 AM
image

Women Mean Business Coalition இலங்கையின் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் அமைப்பு ரீதியான மாற்றத்திற்கான உத்வேகத்தை வலுப்படுத்துகிறது.

Co-Impact Gender Fund ஆதரவுடன்,  Chrysalis நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் வணிகக் கூட்டணி  (Women Mean Business), தனது 5வது கூட்டணிக் சந்திப்பினை அக்டோபர் 29 அன்று நடத்தியது.

இக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெண் தலைமை தாங்கும் வணிகக் கூட்டமைப்புக்கள், அரச நிறுவனங்கள், நிதியியல் அமைப்புகள், ஐ.நா மற்றும் இருதரப்பு நிறுவனங்கள், கல்வித்துறையினர் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றின் 80க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்குகொண்டனர்.

இலங்கையின் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME)  துறையில் பால்நிலை மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.

இந்தக் கூட்டணி, கொள்கை மற்றும் ஒழுங்குமுறைச் சீர்திருத்தம், நிதி மற்றும் சந்தைக்கான அணுகல், காலநிலை நிதியியல், தொழில்முனைவோர் கலாசாரம் மற்றும் நடைமுறை மாற்றம், அத்துடன் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக் குறைப்பு  ஆகிய ஆறு பிரதான கருப்பொருட்களின் கீழ், பெண் தொழில்முனைவோருக்கான அமைப்பு ரீதியான மாற்றத்தை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு தளமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

Chrysalis நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆஷிகா குணசேன) கூறியதாவது:

பெண்களுக்குச் சொந்தமான நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் உந்து சக்தியாகும். பெண்கள் வணிகக் கூட்டணியின் மூலம், கொள்கை வகுப்பாளர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரை இணைத்து, பெண்களின் பொருளாதார நிலைமைகளை அங்கீகரித்து பதிலளிக்கும் ஒரு அமைப்பை நாங்கள் உருவாக்கி வருகிறோம் என்றார். 

இலங்கையின் ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின்  (UNDP) வதிவிடப் பிரதிநிதி, அஸூசா குபோட்டா (Azusa Kubota), கருத்து தெரிவிக்கையில்,

ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்: 'நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றத்திற்கு ஐ.நா அபிவிருத்தி திட்டம் உறுதிபூண்டுள்ளது.

கிரிசலிஸ் நிறுவனத்துடன் இணைந்து, பாலின உணர்திறன் கொண்ட கொள்கைகள் மற்றும் வரவுசெலவுத் திட்டங்களை மேம்படுத்துவதற்கும், பெண் தலைமையிலான நிறுவனங்கள் நிதி வசதிகளைப் பெறுவதற்கான ஒரு சூழலை உருவாக்குவதற்கும், ஆதார அடிப்படையிலான பகுப்பாய்வைப் பயன்படுத்துகிறோம்.

பெண்கள் வணிகக் கூட்டணி, நிலையான மற்றும் சமமான வளர்ச்சிக்காக நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் மாற்றத்தின் மையத்தில் பெண்களை வைப்பதற்கான கூட்டு நடவடிக்கையின் பலத்தை நிரூபிக்கிறது என்றார். 

இலங்கையின் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் சூழலமைப்பு முழுவதும் பால்நிலை சமத்துவம் மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதற்கான கூட்டு ஒத்துழைப்பு, அறிவுப் பகிர்வு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான புதுப்பிக்கப்பட்ட உறுதிமொழிகளுடன் இந்த கூட்டம் நிறைவடைந்தது. அமைப்புகள் பெண்களுக்காகச் செயல்படும்போது, பொருளாதாரங்கள் செழிக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்