தெற்காசிய விளையாட்டுப்போட்டியின் கராத்தே சுற்றுப்போட்டியில் சௌந்தரராஜா பாலுராஜ்  தொடர்ச்சியாக மூன்றுமுறை முதலிடத்தைப்பெற்று தங்கப்பதக்கத்தைவென்று  சாதனை படைத்துள்ளார்.

கல்முனை, பிரதேச செயலாளர்பிரிவிலுள்ள சேனைக்குடியிருப்புக் கிராமத்தைச் சேர்ந்தவர். 2014 ஆம் 2016 ஆம் ஆண்டுகளில் இந்தியா புதுடில்லியில் இடம்பெற்ற கராத்தே சுற்றுப்போட்டியின் சிரேஷ்ட பிரிவு காட்டாப்போட்டியில் முதலிடம்பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்றுச் சாதனைபடைத்தார்.

இறுதியாக இம்மாதம் 5 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே சுற்றுப்போட்டியில் முதலிடம்பெற்று மூன்றாவது தடவையாகவும் தங்கப்பதக்கம் பெற்ற ஒரேயொரு இலங்கைவீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.