2026 வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு

Published By: Vishnu

14 Nov, 2025 | 01:40 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள்  விவாதம் வெள்ளிக்கிழமை (14) இடம்பெறவுள்ள நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மாலை  6 மணிக்கு  நடத்தப்படவுள்ளது.  

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 7 ஆம் திகதி  பாராளுமன்றத்தில் முன்வைத்தார். ஜனாதிபதியின் வரவு செலவு திட்ட உரை 4 மணித்தியாலங்களும் 15 நிமிடங்கள் வரை நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கமாகும்.  

இந்நிலையில் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி 6ஆவது நாளாக   இன்று வெள்ளிக்கிழமை மாலை  இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதன்போது இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாகவா எதிராகவா  வாக்களிப்பது என்பது தொடர்பில்  எதிர்க்கட்சிகள் தனித்தனியாக கூடி ஆராய்ந்துள்ளன.  

அதேவேளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ,மலையகக்கட்சிகள் இன்னும் இறுதி நிலைப்பாட்டை எடுக்கவில்லையெனக் கூறப்படுகின்றது. என்றாலும் வரவு செலவு திட்டத்தில் இந்தமுறை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதை மலையக கட்சிகள் விவாதத்தில் ஆதரவளித்து உரையாற்றி இருந்தன. அதனால் அவர்கள் வாக்களிப்பில் எவ்வாறான தீர்மானத்தை எடுக்கப்போகிறார்கள் என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதம் நாளை 15 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி  எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெற்று அன்றையதினம் மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு  இடம்பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள கற்களை...

2025-12-15 10:23:59
news-image

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில்...

2025-12-15 09:57:31
news-image

கொழும்பு துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு...

2025-12-15 09:51:43
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

2025-12-15 08:59:20
news-image

புதையல் தோண்டிய 06 பேர் கைது!

2025-12-15 09:19:43
news-image

அம்பலாங்கொடை முகத்துவார தேவாலயக் குழுத் தலைவர்...

2025-12-15 09:14:07
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2025-12-15 09:19:00
news-image

நாளை முதல் நாடு முழுவதிலும் மழையுடனான...

2025-12-15 06:09:10
news-image

அனர்த்த நிவாரண விடயங்களில் ஜனாதிபதியின் கருத்துகளில்...

2025-12-15 03:54:13
news-image

கிழக்கு அலை வடிவ காற்றழுத்த தாக்கம்...

2025-12-15 03:51:43
news-image

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும்...

2025-12-15 02:57:37
news-image

டிக்டொக் தொடர்பு முடிவில் 24 வயது...

2025-12-15 02:50:37