சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 50 பேர் கைப்பற்றப்பட்டனர்

Published By: Vishnu

14 Nov, 2025 | 12:51 AM
image

இலங்கை கடற்படை, 2025 அக்டோபர் 27 முதல் நவம்பர் 10 வரை உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோதமான முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐம்பது (50) நபர்களுடன் பதினைந்து (13) டிங்கி படகுகள், ஒரு (01) மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையால் திருகோணமலையில் உள்ள இறக்கண்டி, லங்காபட்டுன, கோகிலாய், போல்டர் முணை, வாகரே, ஜெயநகர், கிண்ணியா மற்றும் ஜின்னா புரம் ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளிலும், மேற்கு கடற்படை கட்டளையால் நீர்கொழும்பு கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியும், தெற்கு கடற்படை கட்டளையால் காலி பலப்பிட்டி மற்றும் அம்பலாங்கொடை கடல் மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியும், தென்கிழக்கு கடற்படை கட்டளையால் அம்பாறையில் உள்ள அட்டாலைச்சேனை கடல் மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியும், வடமத்திய கடற்படை கட்டளையால் மன்னாரின் பல்லேமுனை கடற்கரை பகுதியை உள்ளடக்கியும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐம்பது (50) நபர்கள், பதினைந்து (13) டிங்கி படகுகள், ஒரு (01) மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

மேலும், இந்த நடவடிக்கைகளின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருகோணமலை, நீர்கொழும்பு, ஈச்சிலம்பட்டு, முல்லைத்தீவு, குச்சவெளி, வாழைச்சேனை கிழக்கு, காலி, கிண்ணியா, கல்முனை மற்றும் மண்முனை வடக்கு ஆகிய இடங்களில் உள்ள மீன்வள ஆய்வாளர் அலுவலகங்களுக்கு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டார் முன்னாள் அமீர் ஷேக் ஹமத்...

2026-07-14 17:43:59
news-image

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது...

2026-07-14 17:34:30
news-image

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்...

2026-07-14 17:31:27
news-image

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை...

2026-07-14 17:28:01
news-image

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான...

2026-07-14 17:23:25
news-image

வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12...

2026-07-14 17:20:40
news-image

நீரில் மூழ்கி உயிரிழந்த பொலிஸ் விசேட...

2026-07-14 16:47:04
news-image

எம்பிலிப்பிட்டியவில்  தம்பதியினர் படுகொலை ; சந்தேகநபரான...

2026-07-14 16:49:15
news-image

கட்டார் முன்னாள் அமீரின் மறைவுக்கு திலித்...

2026-07-14 16:59:27
news-image

2030க்குள் சுற்றுலாப் பயணிகளின் சராசரி செலவீனத்தை...

2026-07-14 16:40:12
news-image

கட்டுமானத்துறை என்பது ஒரு நாட்டின் பொருளாதார...

2026-07-14 16:37:26
news-image

மோட்டார் சைக்கிள் ஒன்று மரத்தில் மோதி...

2026-07-14 17:04:32