சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840 கிலோகிராம் பீடி இலைகளுடன் கெப் வண்டியொன்று கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

Published By: Vishnu

14 Nov, 2025 | 12:46 AM
image

இலங்கை கடற்படை, 2025 நவம்பர் 11, அன்று கல்பிட்டி, கப்பலடி மற்றும் ரெட்பானா கடற்கரைகளில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டு போக்குவரத்துக்கு தயார் செய்யப்பட்ட எண்ணூற்று நாற்பது (840) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட சவர்க்காரக் கட்டிகளுடன் கெப் வண்டியொன்றும் (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தினால் கல்பிட்டி கப்பலடி கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்று (01) சோதனையிடப்பட்டது. அங்கு சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்லப்பட்டு போக்குவரத்துக்கு தயார்படுத்தப்பட்ட சுமார் எண்ணூற்று நாற்பது (840) கிலோகிராம் பீடி இலைகள் அடங்கிய கையிருப்புடன் கெப் வண்டி ஆகியன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

அத்துடன், இலங்கை கடற்படைக் கப்பல் விஜயவால் கல்பிட்டி ரெட்பானா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டு, அப்பகுதியில் உள்ள புதருக்குள் ஏழு (07) பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பது (1980) சவர்க்காரக் கட்டிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கெப் வண்டி (01), பீடி இலைத் தொகுதி மற்றும் சவர்க்காரக் கட்டிகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் விசேட பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள கற்களை...

2025-12-15 10:23:59
news-image

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில்...

2025-12-15 09:57:31
news-image

கொழும்பு துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு...

2025-12-15 09:51:43
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

2025-12-15 08:59:20
news-image

புதையல் தோண்டிய 06 பேர் கைது!

2025-12-15 09:19:43
news-image

அம்பலாங்கொடை முகத்துவார தேவாலயக் குழுத் தலைவர்...

2025-12-15 09:14:07
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2025-12-15 09:19:00
news-image

நாளை முதல் நாடு முழுவதிலும் மழையுடனான...

2025-12-15 06:09:10
news-image

அனர்த்த நிவாரண விடயங்களில் ஜனாதிபதியின் கருத்துகளில்...

2025-12-15 03:54:13
news-image

கிழக்கு அலை வடிவ காற்றழுத்த தாக்கம்...

2025-12-15 03:51:43
news-image

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும்...

2025-12-15 02:57:37
news-image

டிக்டொக் தொடர்பு முடிவில் 24 வயது...

2025-12-15 02:50:37