இந்தியாவில் கடினமான டெஸ்ட் தொடரை சந்திக்கவுள்ள உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா

Published By: Vishnu

13 Nov, 2025 | 07:51 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட சுதந்திரக் கிண்ணத்துக்கான இருதரப்பு டெஸ்ட் தொடரும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரும் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவில் மிகவும் கடினமான தொடர் தென் ஆபிரிக்காவுக்கு காத்திருக்கிறது என்று கூறினால் அது தவறாகாது.

கடந்த 10 வருடங்களில் இந்தியாவுக்கு இரண்டு தடவை டெஸ்ட் கிரிக்கெட் விஜயம் செய்த தென் ஆபிரிக்கா, அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் படுதோல்விகளை சந்தித்தது.

2015இல் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட தொடரில் 0 - 3 என இளம் வீரர்களைக் கொண்ட இந்தியாவிடம் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்தது. அந்த தொடரில் 2ஆவது டெஸ்ட் போட்டி மழையினால் கழுவப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் எதிர்கால டெஸ்ட் அணியைக் கட்டி எழுப்பும் குறிக்கோளுடன் இளம் வீரர்களை இந்தியா களம் இறக்கி அதில் வெற்றியும் கண்டது.

தொடர்ந்து 2019இல் உப கண்டத்துக்கு பயணித்த தென் ஆபிரிக்கா, அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட இந்தியாவிடம்  0 - 3 என தோல்வி அடைந்தது.

எவ்வாறாயினும் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா, இம்முறை அனுப வசாலிகளுடன இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தியா இந்த வருடம் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றிகள், 3 தோல்விகள், ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளைக் கொண்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற ஆட்டங்கள் கணக்கில் முழுமையாக வெற்றியீட்டிய இந்தியா, நாளை ஆரம்பமாகவுள்ள தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற முயற்சிக்கும்.

இந்தத் தொடர் இரண்டு அணிகளினதும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான போட்டியாக அமையலாம் என எதிர்வுகூறப்படுகிறது. ஆனால், இந்தியா தனது சொந்த மண்ணில் சுழல்பந்துவீச்சாளர்களைக் கொண்டு பல சந்தர்ப்பங்களில் வெற்றியீட்டியதை மறந்துவிடலாகாது.

தென் ஆபிரிக்கா இந்த வருடம் விளையாடிய 6 போட்டிகளில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உட்பட 5இல் வெற்றிபெற்றிருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்திருந்தது,

தென் ஆபிரிக்கா 1989ஆம் ஆண்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகின்றபோதிலும் இந்தியாவுக்கு எதிராக 1992இலிருந்தே டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

அதற்கு முன்னர் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளுடன் மாத்திரம் தென் ஆபிரிக்கா விளையாடி இருந்தது. இன ஒடுக்கல் காரணமாக 1970இலிருந்து 1991வரை தென் ஆபிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

1991இல் தடை நீக்கப்பட்ட பின்னரே மற்றைய நாடுகளுடன் டெஸ்ட் விளையாட்டில் தென் ஆபிரிக்கா ஈடுபட ஆரம்பித்தது.

இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் இதுவரை நடைபெற்றுள்ள 44 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆபிரிக்கா 18 - 16 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. 10 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.

அணிகள்

இந்தியா: ஷுப்மான் கில் (தலைவர்), ரிஷாப் பான்ட் (உப தலைவர்), ஆகாஷ் தீப், ஜஸ்ப்ரிட் பும்ரா, ரவிந்த்ர ஜடேஜா, யஷஸ்வி ஜய்ஸ்வால், த்ருவ் ஜுரெல், குல்தீப் யாதவ், மொஹம்மத் சிராஜ், தேவ்டத் படிக்கல், அக்சார் படிக்கல், கே. எல். ராகுல், சாய் சுதர்ஷன், வொஷிங்டன் சுந்தர்.

தென் ஆபிரிக்கா: டெம்பா பவுமா (தலைவர்), கோபின் பொஷ், டிவோல்ட் ப்ரவிஸ், டோனி டி ஸோர்ஸி, சைமன் ஹாமர், மாக்கோ ஜென்சன், கேஷவ் மஹாராஜ், ஏய்டன் மார்க்ராம், வியான் முல்டர், சேனுரன் முத்துசாமி, கெகிசோ ரபடா, ரெயான் ரிக்ள்டன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், கய்ல் வெரின், ஸுபய்ர் ஹம்ஸா. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட 19இன்கீழ் இலங்கை...

2026-07-16 20:31:40
news-image

கொழும்பு SSC மைதானத்தில் LPL தொடக்க...

2026-07-16 20:26:18
news-image

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம்,...

2026-07-16 18:24:57
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலை விரைவில் நடத்துமாறு...

2026-07-16 15:53:48
news-image

போக்லண்ட் பதாகையை ஏந்தியதால் ஆர்ஜன்டினா மீது...

2026-07-16 18:22:47
news-image

தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர்...

2026-07-16 15:04:06
news-image

தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டுவந்து இங்கிலாந்தை...

2026-07-16 09:29:57
news-image

இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு...

2026-07-15 20:55:07
news-image

இறுதிப் போட்டிக்கு குறிவைத்து  உலகக் கிண்ண...

2026-07-15 19:34:55
news-image

MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ்...

2026-07-15 17:03:21
news-image

பிரான்ஸை எளிதாக வெளியேற்றிய ஸ்பெய்ன் உலகக்...

2026-07-15 09:45:43
news-image

ஐரோப்பிய பலவான்கள் பிரான்ஸ் - ஸ்பெய்ன்...

2026-07-14 21:51:19