பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினரின் உயிர்பாதுபாப்பு கரிசணைகளை தீர்த்துவைக்க ஜனாதிபதி AKD தலையீடு

13 Nov, 2025 | 05:17 PM
image

(நெவில் அன்தனி)

இஸ்லாமாபாத்தில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள  இலங்கை   கிரிக்கெட் அணியினருக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதென்ற உறுதியை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அளித்துள்ளதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

SLC தலைவர் மற்றும் தலைமை பயிற்றுநர் சனத் ஜயசூரிய ஆகியோருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாகிஸ்தான் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை தொடருமாறு இலங்கை அணிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் பாதுகாப்பு செயலாளர் சம்ப்பத் துய்யகொன்த நேரடியாகப் பேசியதன் பலனாக, வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சிறப்பு பாதுகாப்பு உட்பட அணியை சூழ பாதுகாப்பு படை அதிகாரிகளின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மொஹ்சின் நக்வி, இலங்கை வீரர்களை நேற்று இரவு சந்தித்து அவர்களது உயிர்பாதுகாப்பு கரிசணைகளை நிவர்த்தி செய்வதாகவும் அவர்களைப் பாதுகாப்பதற்கு பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்பினர் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் உறுதி வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்