வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சேவையாற்றும் வைத்தியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொடர் சேவைப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு சுகாதார வசதிகள் முறையாக கிடைக்கப்பெறுவதில்லை. அங்குள்ள வைத்தியர்கள் கஷ்ட பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெறுவதுமில்லை. இதில் அரசியல் தலையீடுகளும் காணப்படுகின்றன. இவற்றுக்கெதிராக அரசாங்கம் துரிதமாக செயற்படாவிட்டால் தொடர் சேவைப்புறக்கணிப்பை முன்னெடுப்போம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த சேவைப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.