அடுத்த தலைமுறை இணைப்பை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் Dialog, Nubia Air 5Gஐ அறிமுகப்படுத்துகிறது

13 Nov, 2025 | 12:24 PM
image

இலங்கையின் #1 இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மிகவும் கவர்ச்சிகரமான 5G Ready ஸ்மார்ட்போனான Nubia Air 5G-ஐ  அறிமுகப்படுத்தியுள்ளது. வடிவமைப்பு, செயல்திறன் மற்றும் மலிவு விலை ஆகியவற்றின் வலிமையான கலவையின் மூலம் அடுத்த தலைமுறை இணைப்பை அனைத்து இலங்கையர்களுக்கும் கிடைக்கச் செய்வதற்கான தனது உறுதியான ஈடுபாட்டை டயலொக் மீண்டும் வலியுறுத்துகிறது.

Dialog A76இன் வெற்றியைத் தொடர்ந்து, 5G தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் தனது முக்கிய இலக்கைத் தொடரும் வகையில், டயலொக் நிறுவனம் Nubia Air 5Gஐ அறிமுகப்படுத்துகிறது. இந்த சாதனம் உயர்தரக் கைவினைத்திறனையும் (premium craftsmanship) உயர்நிலைச் செயல்பாட்டையும் ஒருங்கிணைக்கிறது. 5.9 மி.மீ. கொண்ட ultra-slim வடிவமைப்புடன் விளங்கும் இந்த ஸ்மார்ட்போன், கையில் வசதியாகப் பொருந்தக்கூடிய மெல்லிய, இலகுரக அமைப்பைக் கொண்டுள்ளது. 

அத்துடன், இது தூசி மற்றும் நீர் எதிர்ப்புக் கொண்டிருப்பதால், அன்றாட பயன்பாட்டிற்கான  நீடித்து உழைக்கும் தன்மையை உறுதி செய்கிறது.

Nubia Air 5Gஐ வெளியிட்டதன் மூலம் டயலொக் தொழில்நுட்ப அணுகல் இடைவெளியைக் குறைத்து, மேம்பட்ட 5G திறன்களை ஒவ்வொரு இலங்கையருக்கும் கொண்டு சேர்க்கிறது. கவர்ச்சி, வேகம் மற்றும் மதிப்பை இணைப்பதன் மூலம் இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை வழிநடத்துவதற்கும், அதிகப் பயனர்கள் 5G இணைப்பின் சாத்தியக்கூறுகளை முழுமையாகப் பயன்படுத்த அதிகாரம் அளிப்பதற்கும் டயலொக் தனது அர்ப்பணிப்பை உறுதி செய்கிறது. Nubia Air 5G-ஐக் காண அல்லது கொள்வனவு செய்ய: https://dialog.lk/phones/nubia-air-5g-8gb

இடமிருந்து வலமாக: SINGER Sri Lanka PLC நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குநர் திரு. ஜகத் பெரேரா, SINGER Sri Lanka PLC நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் இயக்குநர் திரு. ஜன்மேஷ் அன்டனி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. லசந்த தெவரப்பெரும, ZTE Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதித் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மைக்கேல் லீ, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளின் துணைத் தலைவர் திரு. திசர கஸ்தூரியாராச்சி, மற்றும் Stelacom (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. சமிக கொடமன்ன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

TATA, Mercedes-Benz வாகனங்களுக்கு பிரத்தியேக நிதியுதவி...

2026-09-09 18:24:31
news-image

வெற்றிகரமாக நிறைவுற்ற ‘ProFood ProPack &...

2026-09-02 14:24:23
news-image

CCC Foundation நடத்தும் bikeathon நிகழ்ச்சியின்...

2026-08-27 12:24:37
news-image

2026 இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு...

2026-08-22 12:33:59
news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47
news-image

இலங்கையின் முன்னணி உணவுத் துறை கண்காட்சியான...

2026-08-14 10:51:37
news-image

RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக...

2026-08-13 17:43:14
news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49