வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சூட்சமமான வழிமுறை..!?

13 Nov, 2025 | 12:20 PM
image

எம்மில் சிலருக்கு அவருடைய நண்பர்களின் பரிந்துரையின் பேரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு அவர்களுடைய திறமையின் காரணமாக வேலை வாய்ப்பு தொடர்ச்சியாகவோ அல்லது விட்டுவிட்டோ கிடைக்கும்.

சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தாலும்.. கடின உழைப்புக்கு ஏற்ற வகையில் ஊதியமோ பாராட்டோ அங்கீகாரமோ கிடைப்பதில்லை. இதற்கு காரணம் சனி பகவானின் தோஷம் அல்லது அவரின் பரிபூரண அருள் கிடைக்காத நிலை என குறிப்பிடலாம்.

இந்நிலையில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வேலை வாய்ப்பு பெற்று அதில் கடினமாக உழைப்பதற்கு ஏற்ற வகையில் ஊதிய உயர்வையும், பணி பாதுகாப்பையும், கௌரவமும் கிடைப்பதற்கான சூட்சமமான வழிமுறை ஒன்றை பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து கடைபிடிக்கும் போது வாழ்வில் நடைபெறும் அதிசயங்களை அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : கரும்பு -செவ்வாழை பழம்- மாதுளம் பழம்.

உங்களது வீட்டிற்கு அருகே உள்ள குளத்தில் உள்ள மீன்கள் அல்லது அருகே உள்ள ஆலயத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதற்காக இடம்பெற்றிருக்கும் யானை, அதே ஆலயத்தில் ஆலய வளாகத்தில் பராமரிக்கப்படும் குரங்குகள்... இந்த மூன்று ஜீவராசிகளையும் நீங்கள் ஏதேனும் அதற்குப் பிடித்த உணவு பொருட்களை சனிக்கிழமைகளில் தானமாக வழங்கி வந்தால்... உங்களுக்கு விரைவில் வேலை வாய்ப்பு கிடைப்பதுடன் பொருளாதார மேம்பாடும் ஏற்றும் பெறுவதை காணலாம். குறிப்பாக மீன்களுக்கும், குரங்குகளுக்கும் மாதுளை பழ முத்துகளையும், யானைகளுக்கு கரும்பையும், செவ்வாழைப்பழங்களையும் உணவாக வழங்கி வந்தால்... உங்களுடைய சனி பகவானின் கர்மவினை குறைந்து அவரின் பரிபூரண அருள் கிடைக்க பெறுவீர்கள்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் பிரச்சினையை குறைத்து கொள்வதற்கான எளிய...

2026-09-15 14:48:01
news-image

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உப ரத்தின கல்

2026-09-14 15:44:29
news-image

பண தட்டுப்பாடு இன்றி நீடித்திருக்க!

2026-09-12 15:08:31
news-image

கணவன்- மனைவி இடையேயான ஒற்றுமை மகிழ்ச்சிகரமாக...

2026-09-11 17:01:21
news-image

சாய் பாபா வழிபாடு - சில...

2026-09-10 14:24:41
news-image

கல்வியில் வெற்றி பெறுவதற்கான சூட்சமக் குறிப்பு..!

2026-09-09 15:43:34
news-image

பணியிடத்தில் உண்டாகும் நெருக்கடிக்கான நிவாரணம்..!?

2026-09-08 17:07:00
news-image

பெப்ரவரி 29 ஆம் திகதி பிறந்தவர்களுக்கு...

2026-09-07 15:57:03
news-image

அசைவ உணவை யார் தவிர்த்திட வேண்டும்?

2026-09-05 16:50:55
news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27