எமது பிரதேசத்துக்கான அபிவிருத்திகளையே ஜனாதிபதியிடம் கேட்டிருக்கிறோம் - பஸ்மின் ஷரீப்

13 Nov, 2025 | 12:56 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தேசிய மக்கள் சக்தியில் இருக்கும் நாங்கள் ஒருபோதும் அமைச்சுப்பதவி கேட்டதில்லை. எமது பிரதேசத்துக்கான அபிவிருத்திகளையே ஜனாதிபதியிடம் கேட்டிருக்கிறோம். அந்த அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன. அதேபோன்று சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் குர்ஆன் பிரதிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் உண்மை இல்லை என ஆளும் கட்சி உறுப்பினர் பஸ்மின் ஷரீப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட  வரவு செலவு திட்ட உரை மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர்கூட இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவலைப்பட தேவையில்லை. நாங்கள் ஜனாதிபதியி்டம் அமைச்சுப்பதவி கேட்டதில்லை.

தேவை ஏற்பட்டால் எங்களுக்கு அமைச்சுப்பதவி தரவும் ஜனாதிபதி தயாராக இருக்கிறார். அதேநேரம் எங்களுக்கு அமைச்சுப்பதவி இல்லாவிட்டாலும் எமது பிரதேசங்களுக்கு தேவையான அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன. கம்பளை பிரதேசத்துக்கு இதுவரை 2 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் கடந்த காலங்களில் முஸ்லிம் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்ன செய்தார்கள் என கேட்கிறோம்.கம்பளை பிரதேசத்தில் முஸ்லிம் அமைச்சராக இருந்த ஒருவர், 30 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருந்து 150 இலட்சம் ரூபா செலவில் சிறிய பாதை ஒன்றை மாத்திரமே அமைத்திருக்கிறார். அதனால் முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் அபிவிருத்தி இடம்பெறவேண்டும் என்பதே எமது கோரிக்கை. அது இடம்பெறுகிறது.

அத்துடன் சுங்கத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்போவதாக பொய் செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அரசாங்கம் அவ்வாறான எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை.

மேலும் வரவு செலவு திட்டத்தில் எமது மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அரசாங்கம் ஒன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு 200 ரூபா சம்பளமாக வழங்க தீர்மானித்திருப்பது இதுவே முதல்தடவையாகும். மலையக மக்களை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடையச்செய்யும் வரவு செலவு திட்டம் இந்த வரவு செலவு திட்டத்தை பார்க்கிறோம். அதனால்தான் பெருந்தோட்ட மக்கள் இந்த வரவு செலவு திட்டத்தை பட்டாசு கொளுத்தி வரவேற்கின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில்...

2026-01-13 17:43:05
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு...

2026-01-13 17:36:02
news-image

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தை வினைத்திறன்...

2026-01-13 17:22:20
news-image

புகையிரத திணைக்களத்தின் பழைய இரும்புகளை அகற்றல்...

2026-01-13 17:17:22
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்...

2026-01-13 16:21:59
news-image

"நாட்டை திவாலாக்கியவர்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பது...

2026-01-13 17:14:50
news-image

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சத்தியாக்கிரக...

2026-01-13 16:38:59
news-image

அநுராதபுரத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் எலிக்காய்ச்சல்...

2026-01-13 16:05:11
news-image

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்...

2026-01-13 16:28:30
news-image

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்...

2026-01-13 16:28:13
news-image

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அதிகாரி கைது

2026-01-13 16:07:42
news-image

அயலகத் தமிழர் தின நிகழ்வை நாங்கள்...

2026-01-13 16:04:39