(செ.சுபதர்ஷனி)
லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மானுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட குற்றப்பத்திரிகை புதன்கிழமை ( 12) பிரதிவாதியிடம் கையளிக்கப்பட்டது.
2024ம் ஆண்டு லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுவதற்கு யோசனை முன்வைத்தாக தம்புள்ள தன்டர்ஸ் அணியின் உரிமையாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான தமீம் ரஹ்மானுக்கு எதிராக சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் மேற்படி வழக்கு விசாரணை புதன்கிழமை (13) உயர் நீதிமன்ற நீதியரசர் உதேஷ் ரணதுங்க முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபரால் மன்றில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள தம்புள்ள தன்டர்ஸ் அணியின் உரிமையாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான தமீம் ரஹ்மானிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இதன்போது பிரதிவாதி தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தனது சேவை பெறுநர் ஏற்கனவே கைதாகி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் தனது சேவை பெறுநர் பிரித்தானிய குடியுரிமை பெற்ற பங்களாதேஷ் பிரஜை ஆவார்.
இந்த வழக்கு காரணமாக பிரதிவாதி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தங்கியிருப்பதாகவும், இதன் காரணமாக அவரது தனிப்பட்ட மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.
அத்தோடு நீதிமன்றத்தின் முன்னால் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள அவர், வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கத் தயாராக உள்ளார், மேலும் இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் வாய் மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றார்.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த அரச தரப்பு சட்டத்தரணி பிரதிவாதியால் முன்வைக்கப்பட்ட உண்மைகள் குறித்து சட்டமா அதிபர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த தினமொன்றை ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சாட்சியங்களையும் கருத்திற் கொண்ட நீதியரசர் சந்தேகநபருக்கு 2 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகள் விதித்து பிணையில் செல்ல அனுமதியளித்திருந்தார். மேலும் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM