அகில இலங்கை சைவ மகா சபை நடத்தும் தமிழ் எங்கள் மொழி சைவம் எங்கள் வழி எனும் இலக்கில் "சைவத் தமிழ் மறு­ம­லர்ச்­சியில் இளை­ஞர்­களின் பங்கும் பணியும்" என்ற தொனிப் பொருளில் அமைந்த உலக சைவ இளைஞர் மாநாடு இன்றும் நாளையும் யாழ்ப்­பாணம் நீரா­வி­யடி இலங்கை வேந்தன் கலைக் கல்­லூ­ரி­யிலும் நாளை­ம­று­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இணுவில் ஞான­லிங்­கேஸ்­வரர்  திருக்­கோ­வி­லிலும் காலை 9 மணி முதல் இடம்­பெற ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. 

இன்­று­காலை 7 மணிக்கு நல்லூர் ஆலய முன்­றலில் இருந்து பண்­பாட்டு ஊர்­வலம் யாழ்.நகர் வீதி­யூ­டாக மாநாட்டு மண்­ட­பத்­தினை வந்­த­டை­வ­துடன் ஆரம்­ப­மாகும் இம்­மா­நாட்டில் சைவத் தமிழ் மறு­ம­லர்ச்­சியில் இளை­ஞர்­களின் பங்­கி­னையும் பணி­யி­னையும் வலி­யு­றுத்தும் வகையில் நாயன்­மார்கள் அரங்கு, சுவாமி விபு­லா­னந்தர் அரங்கு, குன்­றக்­குடி அடி­களார் அரங்கு, ஆறு­மு­க­நா­வலர் அரங்கு, தங்­கம்மா அப்­பாக்­குட்டி அரங்கு, யோகர் சுவாமி அரங்கு என்­ப­னவும் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளன.

பக்தி இயக்க மீள் எழுச்சி, அற­நெறிக் கல்­வியில் வெள்­ளிக்­கி­ழமை பிர­க­டனம், கோவிலைத் தழு­விய குடிகள் குடி­களைத் தழு­விய கோவில்கள் சிவ­பூ­மியில் சைவத் தமி­ழர்­களின் நிலை பேணுகை, அறப் பணி­க­ளூ­டாக சைவத் தமிழ் கிரா­மங்­களை ஆற்­றுப்­ப­டுத்­துகை, வாழை­யடி வாழையாய் சிவ­தொண்­டராய் பணி செய்ய வாரீர் என்ற தலைப்­புக்­களில் கருத்­த­மர்வும் இசை நிகழ்­வுகள், நடனம், நாடகம், யோகா மற்றும் தியானம் ஆகிய நிகழ்­வு­களும் இடம்­பெ­ற­வுள்­ளன. மேலும் இறுதி நாளான ஞாயிற்­றுக்­கி­ழமை அன்று செந்­தமிழ் திருக்­கோயில் இணுவில்  ஞான­லிங்­கேச்­ச­ரத்தில் குரு­மார்கள், சிவ தொண்­டர்கள் பங்கு கொள்ளும் சிவ­யா­கமும் மாநாட்டுத் தீர்­மான உறு­தி­யேற்பு வைப­வமும் இடம்பெறும். இவ்விசேட நிகழ்வில் தமிழக பேரூர் ஆதீனத்தைச் சேர்ந்த தவத்திரு மருதாச்சலம் அடிகளார் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்-பிடத்-தக்-கது.