மலையக மக்களின் அபிவிருத்தியை சம்பளத்துக்கு மாத்திரம் வரையறுக்க வேண்டாம் ; காணி உரிமையையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் - மனோகணேசன்

12 Nov, 2025 | 05:01 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மலையக மக்களின் அபிவிருத்தியை சம்பளத்துக்கு மாத்திரம் வரையறுக்க வேண்டாம். அரசாங்கம் அட்டன் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் அவர்களுக்கான காணி உரிமையையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (12) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட  வரவு செலவு திட்ட உரை மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தோட்டத்தொழிலாளர்களுக்கு அரசாங்கம் மற்றும் தோட்ட கம்பனிகள் இணைந்து 400 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்துக்கு எமது தமிழ் முற்போக்கு முன்னணி கட்சியின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த பம்கள அதிகரிப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் யாராவது சந்தேகம் தெரிவித்தால், அது சம்பள அதிகரிப்புக்கு வழங்கக்கூடாது என்பது அல்ல. மாறாக நீங்கள் வழங்குவதற்கு தீர்மானித்துள்ள சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஏதாவது சட்ட பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய்வது என்ற ஒரு சந்தேகத்திலே அவ்வாறு தெரிவிக்கிறார்கள். 

அதனால் தோட்ட மக்களுக்கு அதிகரித்துள்ள சம்பள அதிகரிப்புக்கு நாங்கள் யாரும் எதிர்ப்பு இல்லை. அதனை வழங்க வேண்டும் என்றே தெரிவிக்கிறோம். சட்டப்பிரச்சினை வந்தால் அதனை அரசாங்கம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை சம்பளத்துக்கு மாத்திரம் வரையறுக்க வேண்டாம்.ஏனெனில் கடந்த வருடம் இடைக்கால வரவு செலவு திட்ட விவாதத்தின்போது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரான சமன்த வித்தியாரத்ன உரையாற்றுகையில், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் அமைக்கப்பட்ட வீடுகளில் 1300 வீடுகள் எஞ்சி இருக்கின்றன.

அதனை சேர்த்து டிசம்பர் 31க்கு முன்னர் 6ஆயிரம் வீடுகளை அமைப்பதாக தெரிவித்திருந்தார்.என்றாலும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனது. அதனை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றே தெரிவிக்கிறோம்.

அதேநேரம் ஜனாதிபதி இந்த சபையில் உரையாற்றுகையில், 4அயிரத்தி 90 மில்லியன் ரூபா இந்திய முறைமையில் முதலீடு செய்து 2ஆயிரம் வீடுகளை அமைப்பதாக தெரிவித்திருந்தார். இங்கு பரஸ்பர முரண்பாடு ஒன்று இருக்கிறது. அதனால் இதுதொடர்பில் அரசாங்கம் எமக்கு  தெளிவுபடுத்த வேண்டும். 

அதேபோன்று பெருந்தோட்டங்களில் மாடி வீடுகளை நிர்மாணிக்கப்போவதாக உங்களது அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். அன்றும் நாங்கள் எதிர்த்தோம். மலைகளுக்கு மேல் மாடி வீடுகளை அமைக்க முடியாது. 

இந்த வருடம் தனி வீடுகளை அமைப்பதாக நீங்கள் கடந்த வருடம் தெரிவித்தீர்கள். தற்போது இந்தவருடம் முடிவடையப்போகிறது. அதனால் அடுத்த வருடம் என்ன வீடுகள் அமைக்கப்போகிறீர்கள்  என்பதை தெரிவிக்க வேண்டும்.

அதனால் பெருந்தோட்டத்தில் எத்தனை வீடுகளை அமைக்கப்போகிறீர்கள், தனிவீடா? மாடிவீடா என்பது தொடர்பில் தெரிவிக்க வேண்டும். நீங்கள் தெரிவித்த பிரகாரம் வீடுகளை நிர்மாணிக்க தவறியுள்ளதாலே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்கின்றனர். 

அவ்வாறு கேட்கும்போது மலையக ஆளும் கட்சி உறுப்பினர்கள் எங்களுடன் முரண்படுகின்றனர். போபப்படுகின்றனர்.இதுதொடர்பில் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கொடுங்கள். என்னைப்பற்றி ஜனாதிபதிக்கு தெரியும். ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியில் லேன்வித் ரணில் என்ற பாடநெறி ஒன்றை தயாரிக்கிறார். 

அதேபோன்று நீங்கள் லேன் வித் அநுர என பாடநெறியை தயாரித்து, அரசாங்கத்தில் இருக்கும் 6 உறுப்பினர்களுக்கும் சிரேஷ் உறுப்பினர்களுடன் எவ்வாறு கலந்துரையாடுவது என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும்.

எமது கட்சிசம்பள ஒப்பந்தம், கூட்டு ஒப்பந்தத்தில் இல்லை. தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலாளர்களாக இருக்காமல், அவரகள் பங்காளிகளாக, சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற வேண்டும் என்பதே எமது கொள்கை. அதுவே அந்த மக்களுக்கான நிரந்தரமான தீர்வாக அமையும். 

புதிய கிராம அதிகாரசபையை இல்லாமல் செய்ய இந்த அரசாங்கம் முயற்சித்தது. அதனை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். அந்த அதிகாரசபைக்கு ரணில் விக்ரமசிங்க ஒதுக்கிய 5மில்லியன் ரூபாவே தற்போது அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியும் ஒதுக்கி இருக்கிறார். அப்படியானால், அதிகாரசபையை மூடுவதில்லை என வாக்குறுதியளித்தாலும், மறைமுகமாக அதனை முடிவிடுவதற்கே திட்டமிட்டு வருகிறீர்கள்.

அத்துடன்  இந்த புதிய கிமார அதிகாரசபையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து பெருந்தோட்ட அமைச்சின் செயலாளருக்கு பெருந்தோட்ட கம்பனிகள் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. இவ்வாறு தெரிவிப்பதற்கு இவர்களுக்கு இருக்கும் அதிகாரம் என்ன? மலையக பகுதிகள் பிற்காலத்திலே அபிவிருத்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டது. 

அதனால் அந்த பகுதிகளை விரைவாக அபிவிருத்தி செய்ய 6 அமைச்சுக்களை இணைத்து வேலைத்திட்டங்களை மேற்கொள்ளலே .இந்த அதிகாரசபையை நாங்கள் அமைத்தோம். அதனால் இதன் நோக்கத்தை தெரிந்துகொள்ள வேண்டும். எனவே மலையக மக்களின் அபிவிருத்தியை சம்பளத்துக்கு மாத்திரம் வரையறுக்க வேண்டாம். 

அவர்களுக்கான காணி உரிமையையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். அந்த மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நாங்களே கதைத்து பெற்றுக்கொண்டோம். அதனால் வரலாற்றை மறக்கக்கூடாது. மலையக மக்களுக்காக நாங்கள் எமது காலத்தில் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். எதுவும் செய்யவில்லை என தெரிவிக்க வேண்டாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26
news-image

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத...

2025-12-10 18:28:06