தங்க நகையை வாங்கியவுடன் அணியலாமா...?

12 Nov, 2025 | 04:04 PM
image

இன்றைய நவ நாகரிகமான காலகட்டத்தில் இளம் பெண்களும் திருமணமான இளம் பெண்மணிகளும் சுப வைபவங்களில் பங்கு பற்றுவதற்காக தங்க நகையை அணிந்து கொள்ள விரும்புகிறார்கள். இதற்காக அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து புதிய டிசைன்களில் வெளியாகி இருக்கும் தங்க நகையை.. நகை விற்பனை செய்யும் நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, மனதிற்கு பிடித்த தையும் புதிய பெசன் நகையையும் தெரிவு செய்து , அங்கேயே அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்வையிடுகிறார்கள்.

அவர்களுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் இருந்தால் மட்டுமே அதனை வாங்கவும் செய்கிறார்கள். இந்நிலையில் தங்க நகையை வாங்கியவுடன் அணியலாமா? என அவர்கள் அவர்களுடைய குடும்பத்தின் மூத்த பெண் உறுப்பினர்கள் கேட்கும் போது, இளம் தலைமுறை பெண்கள் இதிலென்ன தவறு? என்று எளிதாக எதிர் வினாவை தொடுக்கிறார்கள். ஆனால் இது தொடர்பாக சோதிட நிபுணர்களும் , ஆன்மீக முன்னோர்களும் கூறிய விடயங்களை பின்வருமாறு பார்வையிடலாம்.

தங்க நகை கடைகளில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் அனைத்தும் தோஷம் கொண்டவை தான்.  ஏனெனில் அதன் உருவாக்கமும், அதனுடைய ரிஷி மூலமும் வாங்கி அணிபவர்களுக்கு தெரிவதில்லை. பெரும்பாலான நகைகள் அதாவது 95% நகைகள் தோஷம் கொண்டவையே.

இதனால் நல்ல நாளை- திதியை- ஓரையை- நட்சத்திரத்தை- தெரிவு செய்து தங்க நகையை வாங்கினாலும் அதனை வாங்கியவுடன் அணியக்கூடாது. வாங்கி வந்த தங்க நகையை 50 கிராம் அளவிற்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கஸ்தூரி மஞ்சள் எனும் மஞ்சளை வாங்கி வந்து அதனை பொடியாக்கி அதில் சிறிதளவு பன்னீரை சேர்த்து அதில் நீங்கள் வாங்கிய தங்க நகையை இரண்டு மணி தியாலம் வரை ஊற வைத்து விட வேண்டும். அதன் பிறகு அந்த நகையை பன்னீரில் கழுவி பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பின்னர் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்து அல்லது இறைவனின் கழுத்தில் அணிவித்து, அதன் பிறகு அங்கு தொண்டு செய்யும் இறை ஊழியரிடமிருந்துஅந்த நகையை மீண்டும் பெற்று, அதற்குப் பிறகுதான் அதனை அணிய வேண்டும். இப்படி முறைப்படி தங்கத்தை தோஷம் நீக்கி அணியும் போது.. அந்த நகை எக்காரணத்தை முன்னிட்டும் உங்களை விட்டும் உங்களுடைய தலைமுறையை விட்டும் வெளியேறாது. உங்களுடைய பரம்பரையின் கௌரவத்தை பேசும் அடையாளமாக அது மாற்றம் பெறும்.

இன்றும் எம்முடைய மண்ணில் வெகு சில குடும்பங்களில் மாங்கல்யத்திற்காக தங்க நகையை வாங்கி பொற்கொல்லரிடம் கொடுத்து 'பொன் உருக்கு நாள் 'என்று ஒரு நாளை தெரிவு செய்து, அந்த நாளில் நகையை நெருப்பில் உருக்கி , அதன் பிறகு மாங்கல்யமாக வடிவமைப்பார்கள். அந்த மாங்கல்யம் - தோஷம் நீங்கப் பெற்று, தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அந்தப் பெண்மணிக்கு வழங்கும் என்பது ஐதீகம்.

தொகுப்பு:  சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை உடைத்தெறியும் சூட்சம வழிபாடு..!?

2025-12-13 16:18:42
news-image

கஷ்டங்கள் நீங்குவதற்கான ஆற்றல் வாய்ந்த சூட்சும...

2025-12-12 18:20:20
news-image

கடன் சுமையிலிருந்து விடுதலை பெறுவதற்கான சூட்சம...

2025-12-11 14:38:49
news-image

எதிரிகளின் இடையூறு நீங்குவதற்கான பிரத்யேக வழிபாடு..!

2025-12-10 15:16:10
news-image

முருக பெருமானின் பரிபூரண அருள் பெற...!?

2025-12-09 18:49:34
news-image

நினைத்த செயலில் வெற்றியை பெறுவதற்கான சூட்சம...

2025-12-08 15:58:11
news-image

உக்ர தெய்வத்தை யார் வழிபடவேண்டும்?

2025-12-06 16:32:01
news-image

இஷ்ட தெய்வத்தை கண்டறிந்து வழிபடுவது எப்படி..?

2025-12-05 18:45:33
news-image

ஆன்ம பலம் மேம்படுத்துவதற்கான பிரத்யேக வழிபாடு...!?

2025-12-04 15:54:58
news-image

பிதுர் தோஷம் நீங்குவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-12-03 18:32:32
news-image

செல்வ வளத்தை அதிகரிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2025-12-02 15:43:56
news-image

எண்ணிய எண்ணங்கள் ஈடேறுவதற்கான பிரத்யேக மந்திரம்..!

2025-12-01 17:37:54