வருமானம் குறைந்த உள்ளூராட்சி சபை பகுதிகளில் வீதி விளக்கு சிக்கல்கள் அடுத்த வருடத்தில் முழுமையாக நிவர்த்தி – அமைச்சர் குமார ஜயக்கொடி

12 Nov, 2025 | 04:14 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வருமானம் குறைந்த உள்ளூராட்சி சபை பிரதேசங்கள் உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் வீதி விளக்குகளை பொருத்துதல், பராமரித்தல், மின்சாரம் வழங்குதல் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அடுத்த வருடத்தில் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் தர்மப்பிரிய திசாநாயக்க எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு  மேலும் தெரிவிக்கையில்,

வீதி விளக்குகளை பொருத்துதல் தொடர்பில் மின்சார சபைக்கு பெரும் சிக்கல்கள் நிலவுகின்றன. முறையாக அவை அந்தந்த உள்ளூராட்சி சபைகள் மூலமாகவே இடம்பெற வேண்டும்.

மின்சார சபையானது அதற்கான மின் விநியோகத்தை வழங்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொள்கின்றது. வீதி விளக்குகளை பொருத்துவது மற்றும் பாராமரிப்பது போன்ற பொறுப்புகள் உள்ளூராட்சி சபைகள் சார்ந்தவை.

சில பிரதேசங்களில் தேவையற்ற இடத்திற்கு மின்விளக்குகள் பொருத்தப்பட்டும் தேவையுள்ள இடத்திற்கு மின்விளக்குகள் பொருத்தப்படாமலும் காணப்படுவது சிக்கலாக உள்ளன.

அரசாங்கம் என்ற வகையில் இதனை விரிவாக நோக்க வேண்டியுள்ளது. எவ்வாறெனினும் வலு சக்தி அமைச்சுக்கு அது தொடர்பான சட்ட அழுத்தங்களை கொடுக்க முடியாது. இதனை ஒரு சமூகப் பொறுப்பாகவும் மக்களுக்கு வழங்கக்கூடிய மனிதாபிமான சலுகையாகவும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.

அதற்கான நடவடிக்கைகளோடு அவ்வாறு வழங்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணங்களை அறவிடுவது  தொடர்பிலும் சிந்திக்க வேண்டியுள்ளது.

சில உள்ளூராட்சி சபைகள் மிகவும் வருமானம் குறைந்ததாகக் காணப்படுகின்றன. அது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதேவேளை, சிறந்த வருமானத்தைக் கொண்ட உள்ளூராட்சி சபைகளும் அந்த கட்டணங்களை செலுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். 

அதிக வருமானம் வரும் கொழும்பு மாநகர சபை கூட கட்டணங்களை செலுத்துவதில்லை. இவ்வாறு வருமானம் உள்ள மற்றும் வருமானம் இல்லாத உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் நாம் கவனத்திலெடுத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

குறிப்பாக சில பிரதேசங்களில் மாலை ஐந்து மணிக்கெல்லாம் மின்விளக்குகளை ஒளிரவிட்டாலும் அதனை ஒருவரும் அனைப்பதில்லை. மின்சாரத்தை முறையாக வழங்கும் திட்டத்தின் கீழ் அது தொடர்பிலும். நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறான நட்டங்களை அரசாங்கமோ அல்லது மின்சார சபையோ ஏற்க வேண்டியுள்ளது.

எனவே  அனைத்து விடயங்களையும் மீள்பரிசீலித்து வீதி விளக்குகளை பொருத்துதல், பராமரித்தல் மின்சாரம் வழங்குதல் போன்ற விடயங்களில் காணப்படும் சிக்கல்களை அடுத்த வருடம் நிவர்த்தி செய்ய முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

''முழு நாடுமே ஒன்றாக'' என்னும் நடவடிக்கைகமைய...

2026-07-21 16:16:18
news-image

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறலால் பல இலட்சம்...

2026-07-21 16:12:20
news-image

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

2026-07-21 16:13:51
news-image

ஹவாய் 'ரிம்பேக்' சர்வதேச கடற்படைப் பயிற்சியில்...

2026-07-21 15:53:28
news-image

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல்...

2026-07-21 15:47:00
news-image

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும்...

2026-07-21 15:27:16
news-image

இரத்தினபுரி வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம்...

2026-07-21 14:46:43
news-image

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச சேவையும்...

2026-07-21 14:55:45
news-image

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை...

2026-07-21 14:39:05
news-image

தித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு...

2026-07-21 14:51:49
news-image

அட்டனில் தற்காலிக கடைகளை அகற்றச் சென்ற...

2026-07-21 14:24:27
news-image

மரதன்கடவலையில் சொகுசு பேருந்து – லொறி...

2026-07-21 14:25:22