( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள 200 ரூபா கொடுப்பனவு சட்டவிரோது என்று குறிப்பிட்டு இந்த கொடுப்பனவை வழங்கலை தடுக்க எதிர்கட்சியினர் முயற்சிக்கின்றனர்.தோட்டத் தொழிலாளர்கள் குழப்பமடையத் தேவையில்லை. ஜனவரி மாதத்தில் இருந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவோம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகைதந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.இருப்பினும் இன்னும் அவர்களுக்கு முழுமையான அடிப்படை உரிமைகள் கிடைக்கவில்லை. அவர்கள் இன்னும் கம்பனிகளுக்கு உரிமையுள்ள லயன் அறைகளிலேயே வசிக்கின்றனர்.
அவர்களுக்கு வீட்டு உரிமை,காணி உரிமை கிடையாது. போதுமான மலசலகூட வசதிகள் இல்மை. குடிநீர் வசதிகளும் கிடையாது. இந்நிலையில் அவர்கள் வீதிகளுக்கு இறங்குவதற்கு இடமளிக்காது தேவையானதை வழங்க நடவடிக்கை எடுக்கின்றோம். முன்னர் வீதிகளுக்கு இறங்கி போராட்டம் நடத்தியே சம்பள அதிகரிப்புகள் இடம்பெற்றன.
ஆனால் இப்போது இவ்வாறு சம்பள அதிகரிப்பு ஏற்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர். நாங்கள் இம்முறை சம்பளத்தை 400 ரூபாவினால் அதிகரித்து 1750 ரூபா சம்பளத்தை வழங்குகின்றோம். 25 நாட்கள் வேலை செய்தால் மேலதிகமாக மாதத்திற்கு 10,000 ரூபா கிடைக்கும்.
இப்போது இதற்கு எதிர்க்கட்சியில் சிலர் எதிர்ப்புகளை வெளியிட்டு சமூகத்தில் தவறான கருத்துக்களை கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். அரச நிதியை எவ்வாறு கம்பனிகளுக்கு வழங்க முடியும். இவ்வாறு வழங்க முடியாது. இது சட்டவிரோதமானது என்ற கருத்துக்களை பரப்ப முயற்சிக்கின்றனர். இதன்மூலம் நீதிமன்றதிற்கு செல்லவும் முயற்சிக்கப்படுகின்றது. அப்பாவி தொழிலாளர்களுக்கு இவ்வாறு சம்பள அதிகரிப்பை வழங்கும் நடவடிக்கையை காலால் பிடித்து இழுப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை (11) சபையில் உரையாற்றுகையில் இந்த தொகையை தொழிலாளர்களுக்கு கொடுக்காமல் கம்பனிகளுக்கு வழங்கலாம் என்று கூறியிருந்தார்.
இவர்கள் கம்பனிகளுக்கு வழங்கியதை போன்று எங்களுக்கும் யோசனைகளை கூறுகின்றனர். இதில் சூழ்ச்சியொன்று உள்ளது. அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து அதனை நிறைவேற்றுவதன் ஊடாக அதுவே சட்டமாகிவிடும். இதனால் சட்டப்படி இதில் பிரச்சினை இருக்காது.
எங்களுக்கு இதனை வழங்க முடியாது என்று இவர்கள் கூறுவார்களாக இருந்தால் உர மானியங்கள் வழங்குகின்றோம். கம்பனிகளுக்கு நிவாரணங்களை வழங்குகின்றோம். அதேபோன்று இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அங்கவீனர்களுக்கு தனியார் துறையில் தொழில் வழங்கினால் அரசாங்கம் மாதாந்தம் 15ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
எதிர்தரப்பினர் சம்பள அதிகரிப்பு குறித்து மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள். இதனை வழங்காமல் இருக்கவே இந்த தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றனர். எவ்வாறாயினும் தோட்டத் தொழிலாளர்கள் குழப்பமடையத் தேவையில்லை. கூறியவாறு நாங்கள் ஜனவரி மாதத்தில் இருந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவோம் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM