அரசாங்கம் பௌத்த சமயத்தையும் கலாசார மரபுரிமையையும் புறக்கணிக்கிறது - சஜித் பிரேமதாசா குற்றச்சாட்டு

12 Nov, 2025 | 03:23 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாசார  மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நிலையியற் கட்டளை 27/ 2 இல் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசியலமைப்பின் 2 ஆம் அத்தியாயம், இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்திற்கு முதன்மை ஸ்தானத்தை வழங்குவதோடு, ஏனைய சகல மதங்களுக்கும் அதற்குரிய உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், பௌத்தத்தைப் பாதுகாத்து போஷிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாக அமைந்து காணப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது. 

புத்த சாசனத்தையும் அதனது நிலைத்தன்மைக்காகச் செயற்படும் மகா சங்கத்தினரைப் பாதுகாப்பதும், அதன் நீண்ட கால இருப்பும், சங்க மரபின் நடைமுறைகள் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்தலும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக அமைந்து காணப்பட வேண்டும். என்றாலும், தற்போதைய அரசாங்கம் அந்த கலாசார பாரம்பரியத்தை புறக்கணிப்பதாகத் தெரிகிறது.   

1979 ஆம் ஆண்டின் 64 ஆம் இலக்க பிரிவேனா கல்விச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதும், இதன் மூலம், பாரம்பரிய பிரிவேனா கல்விக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பதன் காரணமாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளன  

2025 ஆம் ஆண்டில் புத்தசாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு மற்றும் அதன் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம், 2026 ஆம் ஆண்டில் இந்த அமைச்சின் கீழ் பௌத்த மதத்தின் முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் போலவே அதற்காக ஒதுக்கப்பட்ட  தொகை என்பவற்றை முன்வைக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26
news-image

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத...

2025-12-10 18:28:06