இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் - ட்ரம்ப்

12 Nov, 2025 | 12:17 PM
image

இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர், வெள்ளை மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) பதவியேற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

“ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது. எனினும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா பெருமளவில் குறைத்துள்ளது. ஏதாவது ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும். இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று ட்ரம்ப் இதன்போது மேலும் கூறினார். 

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா கடுமையாக வரி விதித்திருந்தது. குறிப்பாக, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ட்ரம்ப் 50 வீத வரி விதித்தார். 

அதனையடுத்து, இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை வெகுவாக குறைத்துக்கொண்டது. 

இதனையடுத்து, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஐந்து சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதற்கிடையே நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் ட்ரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருக்கிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழகத்திற்கு மட்டுமல்ல புதுச்சேரி மக்களுக்கும் குரல்...

2025-12-09 17:08:24
news-image

ஜப்பான் நிலநடுக்கம் ; 30 பேர்...

2025-12-09 12:19:10
news-image

இந்தோனேசிய வெள்ள பேரழிவு ; உயிரிழப்பு...

2025-12-09 11:23:37
news-image

ஜப்பானில் பாரிய பூகம்பம் : சுனாமி...

2025-12-08 20:27:18
news-image

வடக்கு நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 மாணவர்கள்...

2025-12-08 14:59:56
news-image

கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல்

2025-12-08 12:43:09
news-image

போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா...

2025-12-08 11:56:01
news-image

விமானங்கள் இரத்து ;  பயணச்சீட்டு கட்டணத்தை...

2025-12-08 10:14:16
news-image

இந்தோனேசியாவில் வெள்ளப் பேரழிவு: பலியானோரின் எண்ணிக்கை...

2025-12-07 12:02:57
news-image

கோவா தீ விபத்தில் 23 பேர்...

2025-12-07 08:15:54
news-image

இங்கிலாந்தில் மருத்துவர் மீது பாலியல் துஷ்பிரயோகக்...

2025-12-06 23:25:41
news-image

பாகிஸ்தானின் முப்படைகளின் பிரதானியாக அசிம் முனீர்...

2025-12-06 11:20:51