எகிப்தில் சுற்றுலா பஸ் மீது லொறி மோதியதில் இருவர் உயிரிழப்பு ; 39 பேர் படுகாயம் 

12 Nov, 2025 | 11:43 AM
image

எகிப்தில் கெய்ரோவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்த பஸ் ஒன்று லொறியில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததோடு, 39 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

நேற்று செவ்வாய்க்கிழமை (11) விபத்துக்குள்ளான பஸ்ஸில் 27 ரஷ்யர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கெய்ரோவில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இந்த பஸ்ஸில் பயணித்துள்ளனர். 

இந்நிலையில், ஹர்ஹடா - கெய்ரோ தேசிய நெடுஞ்சாலையில் ரஸ் ஹரிப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது இந்த சுற்றுலா பஸ் மீது எதிரே வந்த லொறி மோதியுள்ளது. 

இந்த விபத்தில் எகிப்து நாட்டைச் சேர்ந்த பஸ் சாரதியும் ரஷ்யாவைச் சேர்ந்த சுற்றுலாப் பணி ஒருவரும் உயிரிழந்தனர். 

விபத்து தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு,  அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய நடிகை த்விஷா சர்மா மரணம்:...

2026-08-19 11:03:35
news-image

உயிருடன் இருக்கும் 62 வயது மூதாட்டி...

2026-08-19 11:05:34
news-image

ஸ்பெயினில் பூமியதிர்ச்சி ; 03 பேர்...

2026-08-19 09:40:46
news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37
news-image

கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள்...

2026-08-18 13:24:33
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய...

2026-08-17 15:18:51
news-image

76 அடி உயரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர்...

2026-08-17 14:50:58
news-image

சமநேரத்தில் ஒரே எண்ணைக் கொண்ட இரு...

2026-08-17 12:33:08
news-image

இந்தியாவில் சோகம்: பீஹார் அசோக்தாம் கோவிலில்...

2026-08-17 11:35:34
news-image

ஹங்கேரியில் போலந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து...

2026-08-16 17:04:23
news-image

இந்தியாவில் இரண்டு தலை, எட்டு கால்களுடன்...

2026-08-15 16:35:15
news-image

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி : 20 பேர்...

2026-08-15 13:30:59