(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாசவை போன்று தமிழ் மக்களுக்கு எவரும் சேவையாற்றவில்லை. தமிழ் மக்களுக்கு அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இருப்பினும் அது அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைய கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது. கடந்த ஆட்சியாளர்களை போன்று நாங்கள் செயற்பட மாட்டோம் என்றும் குறிப்பிட்டது. ஆனால் தற்போது முற்றிலும் எதிர்மறையாக செயற்படுகிறது.
நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய தரப்பினரை போன்று தான் இந்த அரசாங்கம் செயற்படுகிறது. எவ்வித கொடுப்பனவுகளையும் பெற போவதில்லை என்று குறிப்பிட்டவர்கள் சகல கொடுப்பனவுகளையும் இரகசியமாக பெற்றுக்கொள்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கு அரசியலமைப்பால் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகளை பெற்றுக்கொள்ளுங்கள் அதில் எமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் மக்களை ஏமாற்றியது தான் தற்போது பிரச்சினையாக உள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு இல்லாவிடின் இந்த அரசாங்கம் இல்லை என்றே குறிப்பிட வேண்டும். இந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் மோசடி மற்றும் அரச நிதி முறைகேடு தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு மேற்கொள்ளவில்லை.இவ்வாறான பின்னணியில் ஆணைக்குழு மீது எவ்வாறு நம்பிக்கை தோற்றம் பெறும்.
இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும் அவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். தெற்கில் அரசியல் செல்வாக்கு பலவீனமடையும் போது வடக்கில் அரசியல் இருப்பை வலுப்படுத்த தமிழ் மக்களுக்கு ஏதாவதொன்றை செய்ய வேண்டும் என்று நினைக்க கூடாது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி வசமிருந்த தமிழர்களின் வாக்கு வங்கிகளை கைப்பற்றுவதற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்க கூடாது. முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச ஆகியோர் தமிழ் மக்களுக்கு சேவையாற்றினார்கள். பிற்பட்ட காலத்தில் வந்த ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் குறித்து அதீத கவனம் செலுத்தவில்லை.
தமிழ் மக்களுக்கு அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இருப்பினும் அது அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைய கூடாது என்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM