(செ.சுபதர்ஷனி)
பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் சுற்றுலாவுக்காக கிராமத்திலிருந்து குடும்பமாக வெளியிடங்களுக்கு பயணிப்பவர்கள் சுய புகைப்படங்களுடன் தாம் இருக்கும் இருப்பிடம் தொடர்பான தகவல்களை முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றுவதைத் தவிர்க்குமாறு உதவி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதயகுமார வுட்ளர் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 376 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் வெளியிடங்களுக்குச் செல்வோர் பழக்கமற்ற, முன்னர் அறியாத நீர்நிலைகளில் நீராடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் டிசம்பர் மாதம் அனைவரும் பண்டிகை காலத்தினுள் நுழைகிறோம். பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் உல்லாசப் பயணங்கள், யாத்திரைகள் போன்ற சுற்றுலாவுக்காக கிராமங்களில் உள்ளோர் தாய், தந்தை, பிள்ளைகள் என குடும்பமாக வெளியிடங்களுக்கு பயணிக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது சுய புகைப்படங்களுடன் தாம் இருக்கும் இருப்பிடம் தொடர்பான தகவல்களையும் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றுவது தவிர்த்துக் கொள்ளுங்கள்.
பொதுமக்களுக்கு இத்தகைய தகவல்களை வெளிப்படுத்துவது உகந்த விடயமல்ல. உங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் வீடு தொடர்பான தகவல்களை அறிந்து வைத்துள்ள குற்றவாளிகளுக்கு அது நல்ல சந்தர்ப்பமாக அமையலாம். ஆகையால் உங்கள் இருப்பிடம் பற்றி யாருக்கும் தெரியக்கூடாது என்பதை தாய்மார்கள் மற்றும் தந்தையர்களுக்கு நினைவூட்டுகிறோம். அதேபோல் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் போது தாம் பயணிக்கும் வாகனம் அல்லது பேருந்து, வாகன சாரதி, வாகன உரிமையாளர் மற்றும் இயந்திர கோளாறு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுவது அவசியம்.
அண்மையில் தம்புத்தேகம பகுதியில் பேருந்து சாரதி, குறுகிய பாதையில் அதிக வேகத்துடன் பேரூந்தை செலுத்தியமையால் கோர விபத்தொன்று சம்பவித்திருந்தது. அதிக வேகம், மது பாவனை , கவனயீனம் மற்றும் அனர்த்தம் விளைவிக்கும் வகையில் வாகனத்தை செலுத்துவது தொடர்பில் அவதானத்துடன் இருங்கள்.
விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 071-8598888 என்ற பொலிஸ்மா அதிபரின் வாட்சப் இலக்கத்துக்கு பொதுமக்கள் தகவல் வழங்க முடியும். மேலும் பொலிஸ் தலைமையகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஈ-டிரப்பிக் என்னும் சமூக வலைத்தளத்தின் ஊடாகவும் இவ்வாறான தகவல்களை வழங்க முடியும்.
கடந்த வருடம் மாத்திரம் நாடளாவிய ரீதியில் நீரில் மூழ்கி 595 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி 376 உயிர்கள் பலியாகியுள்ளன.
பழக்கமற்ற நீர் நிலைகளிலும், அபாயமிக்க பகுதிகள் என அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்ட இடங்களிலும் பொதுமக்கள் நீராட பாதிக்கப்பட்டுள்ளனர். அபாயத்தை உணர்ந்து பழக்கமற்ற முன்னர் அறியாத நீர்நிலைகளில் நீராடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். பிரதேசவாசிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினரிடம் தகவல் அறிந்ததன் பின்னர் நீர் நிலைகளில் நீராடுவது நல்லது என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM