இலங்கையின் வெற்றி இலக்கு 300 ஓட்டங்கள்; பாகிஸ்தான் 50 ஓவர்களில் 299 - 5 விக்.

11 Nov, 2025 | 08:07 PM
image

(நெவில் அன்தனி)

ராவல்பிண்டியில் இன்று ஆரம்பமான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கைக்கு 300 ஓட்டங்களை வெற்றி இலக்காக பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 299 ஓட்டங்களைக் குவித்தது.

சல்மான் அகா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அபார சதம் குவித்தார். அவர் 87 பந்துகளில் 9 பவுண்டறிகள் அடங்கலாக 105 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஹுசெய்ன் தலாத் 62 ஓட்டங்களையும் மொஹம்மத் நவாஸ் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களையும் பக்கார் ஸமான் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் 24ஆவது ஓவர்வரை பாகிஸ்தானை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இலங்கை அதன் பின்னர் ஆட்டத்தின் பிடியைத் தளரவிட்டது.

அப்போது 4 விக்கெட்களை இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம்  பாகிஸ்தான்  பெற்றிருந்தது.

ஆனால், சல்மான் அகா, ஹுசெய்ன் தலாத் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 138 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை பலமான நிலையில் இட்டனர்.

அதனைத் தொடர்ந்து சல்மான் அகா, மொஹம்மத் நவாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் மேலும் 66 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இலங்கை அணி 5 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 43 ஓட்டங்களை பெற்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓய்வுபெற்றார் WWE ஜாம்பவான் ஜோன்சினா!

2025-12-14 13:48:40
news-image

மெஸ்ஸியை பார்க்க முடியாத ஆத்திரத்தில் ரகளை...

2025-12-13 16:30:55
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: செத்மிக்கவின்...

2025-12-13 15:19:36
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஐக்கிய...

2025-12-12 19:13:18
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2025-12-12 18:02:03
news-image

19இன் கீழ் உலகக் கிண்ணம்: இலங்கையை...

2025-12-12 15:12:17
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி 2025-27 டெஸ்ட்...

2025-12-12 14:05:24
news-image

குவின்டன் துடுப்பாட்டத்திலும் பார்ட்மன் பந்துவீச்சிலும் அசத்தல்...

2025-12-12 12:42:07
news-image

உலக கராத்தே சம்மேளனத்தின் (WKF) புதிய...

2025-12-11 18:39:16
news-image

19 வயதுக்குட்பட்டோர் இலங்கை கிரிக்கெட் அணி...

2025-12-10 12:47:26
news-image

தென் ஆபிரிக்காவுடனான முதலாவது ரி20 இல்...

2025-12-09 23:12:13
news-image

பெத்தும் நிஸ்ஸன்க குவித்த 3ஆவது அரைச்...

2025-12-09 18:18:08