இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் மது, மாது, போதை பொருள் பாவனையில் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறார்கள். தொடக்கத்தில் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தாலும்... காலப்போக்கில் இது உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிப்பதுடன், உள நலத்தையும் பலவீனமாக்கி ஓரிடத்தில் ஒடுங்கி உட்கார வைத்து விடுகிறது.
இதனால் இதிலிருந்து வெளியே வர வேண்டும். கைவிட வேண்டும் என எண்ணினாலும் உங்களுடைய உள்ளமும் உடலும் அதற்கு ஒத்துழைப்பதில்லை- ஒப்புக் கொள்வதும் இல்லை. இத்தகைய தருணங்களில் நீங்கள் தீய பழக்கங்களுக்கு ஆளாகி, அடிமையாகி இருக்கும்போது அதிலிருந்து விடுதலைப் பெற எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் எளிதான சில குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்குள்ள விநாயகருக்கு குறிப்பாக ராஜ விநாயகர் என்று இருந்தால் அந்த விநாயகரை சூரிய ஓரை தருணத்தில் அருகம்புல்லை சாற்றி வணங்கிட வேண்டும். தொடர்ந்து ஏழு வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய ஓரையில் இந்த ராஜ விநாயகரை வணங்கினால் மனதில் சலனமும், சஞ்சலமும் ஏற்பட்டு , போதைப்பொருள் பாவனை குறித்த அடிமையிலிருந்து விலகுவதற்கான உத்வேகம் கிடைக்கும்.
அதே தருணத்தில் உங்களுடைய பொருளாதார சக்திக்கு ஏற்ற வகையில் ஒரு பூட்டினை வாங்கி, அதில் ஒரு வெள்ளை பேப்பரில் நான் போதை பொருள் பாவனையில் இருந்து விலக வேண்டும்... நான் புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து விலக வேண்டும்... நான் கெட்ட சகவாசத்தில் இருந்து விலக வேண்டும்... நான் சட்ட விரோத உறவிலிருந்து விலக வேண்டும்... என உங்களின் பாதிப்பை எழுதி, அதை அந்த பூட்டில் வைத்து பூட்டிவிட்டு சாவியை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து ஆறு வாரம் செய்து வாருங்கள். அதன் பிறகு உங்களுடைய - உங்களை ஆக்கிரமித்து இருக்கும் - ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கும் தீய பழக்கங்கள் உங்களிடமிருந்து விடை பெறுவதை நீங்களே அவதானிப்பீர்கள்.
தொகுப்பு: சுபயோக தாசன்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM