தரணி குமாரதாசவை கூட்டுறவுச் சங்க பதிவாளர் பதவிக்கு நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

11 Nov, 2025 | 04:40 PM
image

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவியில் தற்போது கடமையாற்றி வரும் இலங்கை நிர்வாக சேவையின் ஐ ஆம் தர அதிகாரியான தரணி குமாரதாசவை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் கூட்டுறவுச் சங்க பதிவாளர் பதவிக்கு  நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

2025.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 11 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் கூட்டுறவுச் சங்க பதிவாளர் பதவியில் கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் ஐ ஆம் தர அதிகாரியான. எச்.ஏ.ஆஷா ஹப்புஆராச்சி அவர்களை அப்பதவியிலிருந்து விடுவிக்குமாறு வேண்கோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அவரை குறித்த பதவியிலிருந்து விடுவிப்பதற்கும், அதனால் ஏற்படும் பதவி வெற்றிடத்திற்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவியில் தற்போது கடமையாற்றி வரும் இலங்கை நிர்வாக சேவையின் ஐ ஆம் தர அதிகாரியான தரணி குமாரதாசவை நியமிப்பதற்கும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு...

2026-09-16 14:56:41
news-image

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-09-16 14:56:09
news-image

யாழ். களப்பில் 9,000 கடல் அட்டைகளுடன்...

2026-09-16 14:55:03
news-image

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உட்பட சட்டவிரோத செயற்பாடுகள்...

2026-09-16 14:52:16
news-image

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் நாமல்...

2026-09-16 14:14:14
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு...

2026-09-16 13:51:46
news-image

மட்டக்களப்பில் சிவஞானம், சுமந்திரன் உட்பட 4...

2026-09-16 12:46:18
news-image

அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை...

2026-09-16 12:49:25
news-image

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்காத...

2026-09-16 13:12:57
news-image

மாத இறுதிக்குள் வருமான வரியைச் செலுத்துங்கள்...

2026-09-16 12:44:59
news-image

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முழுவதையும் வற்றச்...

2026-09-16 12:12:13
news-image

ஞானசார தேரர் மீதான வழக்கு செப்டெம்பர்...

2026-09-16 12:21:37