(நெவில் அன்தனி)
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது.
இப் போட்டியில் களத்தடுப்பை இலங்கை அணித் தலைவர் சரித் அசலன்க தெரிவு செய்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியில் அறிமுக வீரராக 24 வயதான காமில் மிஷார இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
ஒன்பது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்ததை அடுத்து இன்றைய போட்டியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அவருக்கான இலங்கை அணித் தொப்பியை தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரிய கையளித்தார்.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் பெத்தும் நிஸ்ஸன்க, காமில் மிஷார, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க (தலைவர்), ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
பாகிஸ்தான் அணியில் பக்கார் ஸமான், சய்ம் அயூப், பாபர் அஸாம், மொஹம்மத் ரிஸ்வான், சல்மான் அகா, ஹுசெய்ன் தலாத், மொஹம்மத் நவாஸ், பாஹீம் அஷ்ரவ், ஷஹீன் ஷா அப்றிடி (அணித் தலைவர்), ஹரிஸ் ரவூப், நசீம் ஷா ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM