அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் ; நாமல் ராஜபக்ஷ

11 Nov, 2025 | 02:52 PM
image

( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

ஏழைகளுக்கு  வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் தான் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும், நாட்டு மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அடுத்த ஆண்டாவது மக்களுக்கு  வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள்  என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல்  ராஜபக்ஷ அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற  2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான  மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து சுமார் 4.30  மணித்தியால வரலாற்று சாதனையான உரையை நிகழ்த்தினார் என்று ஆளும்  தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த வரவு - செலவுத் திட்டத்தில் வரலாற்று சாதனைமிக்க என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை ஆழமாக ஆராய வேண்டும்.

2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் 50 சதவீதமேனும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த கால வரவு - செலவுத் திட்டங்களில் செல்வந்தர்களிடமிருந்து பெற்று, ஏழைகளுக்கு நிவாரணமளிக்கப்பட்டது, ஆனால் இந்த வரவு செலவுத் திட்டம் ஏமைகளிடமிருந்து பெற்று செல்வந்தர்களுக்கு வழங்கும் போக்கில் காணப்படுகிறது.

பொருளாதார மீட்சிக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்  நாங்கள் எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு  மக்கள் தான் எதிர்ப்பு தெரிவித்தது. 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் பேசிய விடயங்களை ஹன்சாட்டில் இருந்து தொகுத்து நூலாக வெளியிட வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும், நாட்டு மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

 உங்களைப்  போன்று வைராக்கியத்துடன் செயற்பட போவதில்லை .அடுத்த ஆண்டாவது மக்களுக்கு  வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன்...

2026-08-10 09:10:24
news-image

தமன பகுதியில் புதையல் தோண்டிய நபர்...

2026-08-10 09:04:44
news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59
news-image

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும்...

2026-08-10 01:51:38
news-image

ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப்...

2026-08-09 14:33:03
news-image

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும்...

2026-08-09 15:52:35
news-image

சமூக ஊடகங்கள் மூலம் சிறைச்சாலை அநீதியை...

2026-08-09 14:34:30
news-image

சிறைச்சாலைகளில் கைதிகள் மிருகங்களை விடவும் மோசமாக...

2026-08-09 14:57:24