(நெவில் அன்தனி)
இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் மேகாலயா கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சௌதரி 8 பந்துகளில் 8 சிக்ஸ்களை தொடர்ச்சியாக விளாசியதுடன் 11 பந்துகளில் அரைச் சதம் குவித்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக அரைச் சதம் குவித்து சாதனை நிலைநாட்டினார்.
இதன் மூலம் அனைத்துக் கால கிரிக்கெட் ஜாம்வான்கள் இருவரின் மைல்கல் சாதனைகளை முறியடித்தவர் என்ற பெருமையை 25 வயதான ஆகாஷ் சௌதரி பெற்றுக்கொண்டார்.
ஒரே ஓவரில் 6 சிக்ஸ்களை விளாசிய அவர் அடுத்து அவர் எதிர்கொண்ட ஓவரின் முதல் 2 பந்துகளில் மேலும் 2 சிக்ஸ்களை விளாசி இந்த அரிய சாதனையை நிலைநாட்டினார.
மேகாலயா அணிக்கும் அருணாச்சல் பிரதேஷ் அணிக்கும் இடையில் குஜராத் மாநிலத்தின் சுராத் விளையாட்டரங்கில் வார இறுதியில் நடைபெற்ற ரஞ்சி கிண்ண கோப்பை பிரிவு கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்திலேயே ஆகாஷ் இந்த இரண்டு சாதனைகளையும் நிலைநாட்டினார்.
மேகாலயா அணியின் முதல் இன்னிங்ஸில் 8ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக ஆடுகளம் நுழைந்த ஆகாஷ் சௌதரி, முதலாவது பந்தில் ஓட்டம் பெறாததுடன் அடுத்த 2 பந்துகளில் ஒற்றைகளைப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து இடதுகை சுழல்பந்துவீச்சாளர் லிமார் தாபியின் ஓவரை எதிர்கொண்ட ஆகாஷ் சௌதரி தொடர்ச்சியாக 6 சிக்ஸ்களை விளாசினார்.
இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் 6 சிக்ஸ்களை விளாசியவர்கள் வரிசையில் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள் - 1968), ரவி ஷாஸ்திரி (இந்தியா - 1985) ஆகியோருடன் மூன்றாவது வீரராக ஆகாஷ் சௌதரி இணைந்துகொண்டார்.
அதன் பின்னர் மற்றொரு சுழல்பந்துவீச்சாளரான ரி.என்.ஆர். மோஹித்தின் ஓவரை எதிர்கொண்ட ஆகாஷ், முதல் இரண்டு பந்துகளை சிக்ஸ்களாக அடித்து 8 பந்துகளில் 8 சிக்ஸ்களை விளாசிய முதலாவது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.
இசெக்ஸ் அணிக்கு எதிராக லெஸ்டர்ஷயர் வீரர் வெய்ன் வைட் 2012இல் 12 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ததே முந்தைய அதிவேக அரைச் சதமாக இருந்தது.
ஆகாஷ் அரைச் சதம் பூர்த்திசெய்ததும் மேகாலய அணி தனது முதல் இன்னிங்ஸை 8 விக்கெட்கள் இழப்புக்கு 629 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்டது.
அருணாச்சல பிரதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 73 ஓட்டங்களுக்கு சுரண்டதுடன் பலோ ஒன்னில் 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இன்னிங்ஸ் மற்றும் 446 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் சௌதரி முதல் இன்னிங்ஸில் 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்ஸில் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
பந்துவீச்சில் 31 போட்டிகளில் 90 விக்கெட்களைக் கைப்பற்றி ஒரு சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக ஆகாஷ் சௌதரி முன்னேறி வருகிறார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM